Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

குஷ்பு கருத்தால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன்


பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், தவறான கருத்துகளை அவர் கேட்டிருப்பார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். தமிழகத்தில் நடைபெற உள்ள 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணித்துள்ளது. ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ''மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடம் முடிவை தெரிவித்தே விடுதலைசிறுத்தைகள் கட்சி முடிவு எடுத்தது. மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை புதுச்சேரியில் உள்ளது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மையின மக்களை பாதிக்கும் என்பதால்தான் எதிர்க்கிறோம். ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனிச் சட்டங்கள் உள்ளன. சட்டப்பேரவை தேர்தல்களில் ஆதாயம் பெறவே பாஜக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்கிறது. பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. தவறான கருத்துகளை குஷ்பு கேட்டிருப்பார்.

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பணியில் வைகோ சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியின் முடிவின்படி செயல்படுவோம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் மக்கள் நலக்கூட்டணியிலுள்ள கட்சிகள் அவர்களாகவே  முடிவு எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாராயணசாமி தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் என்பதாலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.