Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 8, 2016

திருமங்கலம் டூ நேருபூங்கா..! மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்


சென்னை திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கப்பாதையில் இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

 சென்னையில் ஒருபக்கம் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மறுபக்கம் மெட்ரோ பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையேயும், இரண்டாவது கட்டமாக சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 3-வது கட்டமாக திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மெட்ரோ ரயிலின் 2-வது வழித்தடத்தில் 9 கிலோ மீட்டர் வரை இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் முதல் திருமங்கலம் வரை சுரங்கப்பாதையில் 9 நிலையங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.