Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 14, 2016

70 ஆண்டுகால தாய்லாந்து சரித்திரம் சரிந்தது


70 ஆண்டுகள் தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபால் இன்று காலமானார். உலகில் ’நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர்’ என்னும் பெருமை கொண்ட இவர், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவசிகிச்சை பலனின்றி 88 வயதில்  காலமானார்.



தாய்லாந்து மக்கள் நேற்று முதலே பூமிபால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டு, மன்னர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். பெண்கள் பிங்க் நிற ஆடை அணிந்து வந்து அவர் புகைப்படத்தை ஏந்தி பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். அவர் இறந்த செய்தி தாய்லாந்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசர் பூமிபால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்தவர் , ஜூன் 9 1946-ல் அரியணையில் அமர்ந்துள்ளார். இவர் இன்று இறந்ததைத் தொடர்ந்து தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.