சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட டாடா குழுமத்தைக் கட்டுப்படுத்தும் டாடா சன்ஸ் போர்டில் தமிழத்தைச் சேர்ந்த டாடா கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நடராஜன் சந்திரசேகரன் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்த சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரத்தன் டாடா மீண்டும் இடைக்காலத் தலைவராகியுள்ளார். அடுத்த நான்கு மாதங்களில் புதியத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கிடையே புதியத் தலைவராக யாரை நியமிக்கலாம் என டாடா சன்ஸ் போர்டு ஆலோசித்து வருகிறது. இதில் டாடா கன்சல்டிங் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான நடராஜன் சந்திரசேகரன், ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைவர் ரால்ஃப் ஸ்பெத் ஆகியோரது பெயர்கள் அடி படுகின்றன. அது தவிர ட்ரென்ட் நிறுவனத் தலைவர் நோயல் டாடாவின் பெயரும் பட்டியலில் இருக்கிறது. இவர் பதவி நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரியின் மைத்துனர் ஆவார். இந்த மூன்று பேரில் இருந்து ஒருவருக்கு டாடா குழுமத் தலைவராக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதில் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் நோயல் டாடாவுக்கு வாய்ப்பு அதிகம். ஜாகுவார் தலைவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சிரமம். நடராஜன் சந்திரசேகரன் நீண்ட காலமாக டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவர். டாடா சன்ஸ் போர்டு உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர். அதனால், நடராஜன் சந்திரசேகரன் டாடா குழுமத் தலைவராக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் டாடா சன்ஸ் போர்டின் கூடுதல் இயக்குனராக செவ்வாய்க்கிழமை சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜாகுவார் தலைவரையும் கூடுதல் இயக்குனராக டாடா சன்ஸ் நியமித்துள்ளது. டாடா போர்டில் தற்போது 11 உறுப்பினர்கள் உள்ளனர்.
இது குறித்து டாடா சன்ஸ் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 'தாங்கள் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களை தலைமையுடன் வெற்றிகரமாக இயக்கிக் காட்டியதற்கு அளிக்கப்படும் பரிசு ' என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத் தலைவர் பதவிக்கு பெயர் அடிபடும் நடராஜன் சந்திரசேகரன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் . கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலையும் திருச்சி ரீஜனல் என்ஜீனியரிங் கல்லூரியில் எம்.சி.ஏவும் படித்தார்.
கடந்த 1987ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். 2009ம் ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத் தலைவர் ஆனார்.இவரது தலைமையில் டிசிஎஸ் நிறுவனம் சர்வதேச அளவில் மிக முக்கியமான தகவல் தொடர்பு நிறுவனம் ஆகியது. இந்த நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். 2015-16ம் ஆண்டில் டிசிஎஸ் 16 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக ஈட்டியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.