தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த வதந்திகள் தினமும் தமிழகத்தில் பரவி பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கி வரும் நிலையில்,அரசியல் கட்சிகள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்று முக்கிய தலைவர்கள் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் அளித்த பதில்கள்....
முன்னாள் எம்.எல்.ஏ., செ.கு.தமிழரசன்!
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகள் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., செ.கு. தமிழரசனிடம் கேட்டோம்.அவர் கூறுகையில், "கலையுலகில் 20 ஆண்டுகள்,அரசியலில் 30 ஆண்டுகள் என்று ஓயாத உழைப்பில் இருப்பவர்.அதிலும் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக,எதிர்க்கட்சித் தலைவராக,முதல்வராக என்று நிர்வாக ரீதியாக இருக்கிறார். இந்த நிலையில் உடல் நலம் குன்றுவது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். இந்த நிலையில் மாநிலத்தில் அமைதியைக் குலைக்க,ஊடகங்களைக் கையில் வைத்துக்கொண்டு சிலர் செய்யும் சதி. இப்படி வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு இது ஒன்றும் புதுசு இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா தமது வீட்டில் ஓய்வு எடுத்தாலே,அவருக்கு உடம்பு சரி இல்லை அப்படின்னு வதந்தி பரப்புனாங்க. ஆக இதையே திட்டமிட்டு நிர்வாகத்தை முடக்க முயற்சிப்பது,கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தைத் திசை திருப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர். வெளியில் ஜனநாயகவாதி போல முகமூடி போட்டுக்கொண்டு பிரசாரம் செய்கிறார்கள்.
முதல்வர் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் பதில் கூறுகிறது.கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்கள் கூறுகிறார்கள்.அரசாங்கம் சொல்கிறது.இதுக்கு மேல் யார் சொல்லவேண்டும்? முதல்வரின் படத்தை வெளியிடவேண்டும் என்று எதிர்க்கட்சியின் தலைவரே அறிக்கை வெளியிடுகிறாரே...அவர்கள் ஒரு பெண்மணி. அவரின் படத்தை வெளியிடவேண்டும் என்கிறாரே இது என்ன ஒரு அரசியல் நாகரீகம்.
அதே போல ஸ்டாலின் எங்கு செல்கிறார் எந்த மருத்துவமனைக்குச் செல்கிறார் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் என்று அறிக்கை வெளியிட முடியுமா அவரால்.ஒருமுறை தனது ஒரு மகன் இன்னொரு மகன் பற்றி இப்படி சொன்னார் என்று அவரே கூறியிருந்தார். இப்படி குழப்பமான ஒருவர் இப்படி சொல்ல என்ன ஒரு நியாயம், தார்மீக உரிமை,ஜனநாயக மரபு இருக்கு.." என்றார்.
தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜ்!
முதல்வர் உடல் நலம் குறித்த வதந்திகள் பற்றி நம்மிடம் பேசிய தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜ் கூறுகையில்,"தமிழக முதல்வர் ஒரு பெண்மணி. அவரின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கை நியாயமானது அல்ல. அதைத் திரும்பப் பெறவேண்டும்.ஏனெனில் அவரின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது.காரணம் முதல்வருக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு.அதில் தலையிடுவது யாராக இருந்தாலும் தவறு.அதே போல மருத்துவமனையில் முதல்வர் இருக்கும் புகைப்படத்தை வெளியிடச் சொல்வதில் எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.இப்படி அவர் கேட்பது எல்லா தரப்பிலும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எங்களைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் அரசு முடங்கிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.முதல்வர் விரைவில் பூரண குணம் அடையவேண்டும்" என்றார் பொறுப்பாக.
கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு!
"யார் தவறாக வதந்திகள் பரப்புகிறார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.எதிர்க்கட்சிகள் இப்படிப்பட்ட வதந்திகளைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.எங்களைப் பொறுத்தவரையில் முதல்வர் அவர்கள் விரைவில் பூரண குணம் அடைந்து, இன்னும் வலிவோடும் பொலிவோடும் தமிழக ஆட்சி நிர்வாகத்தை அம்மா நிச்சயம் செய்வார்கள்.கட்டாயம் செய்வார்கள்.
வதந்திகள் உண்மையாகாது.ஆனால் அவரின் உடல்நலம் குறித்து திட்டமிட்டு சிலர் முக்கியமாக எதிர்க்கட்சிகள் மாலை நேரத்தில் வதந்திகளைக் கிளப்புகிறார்கள்.அதையெல்லாம் பெரும்பான்மையான மக்கள் நம்புவதில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா!
எங்கள் பொதுச் செயலாளர் கூறியது போல முதல்வர் அவர்கள் மீண்டும் உடல்நலம் பெற்று வரணும்.ஏனெனில் அதிமுக தொண்டர்கள் மனசோர்விலும்,மன வேதனையிலும் இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் ஓர் இரும்புப் பெண்மணி என்று பேர் எடுத்து இருக்கிறார். அவருக்கு ஒன்றும் ஆகிட கூடாது.மீண்டு வரணும்.இதுதான் எல்லோரின் விருப்பமும்.ஆனால் வதந்திகளுக்கு அரசுதான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.அதிமுக பொதுச் செயலாளர் என்பதைக் கடந்து தமிழகத்தின் முதல்வர் என்பதால் என்ன நடக்கிறது என்பதை அரசுத்தரப்பில் இருந்து சொல்லவேண்டும். அப்போதுதான் வதந்திகள் நிற்கும்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு!
வதந்திகள் எப்போதும் வந்துகொண்டுதான் இருக்கும்.ஒவ்வொரு பிரபலமும் மருத்துவமனை சென்றுவிட்டால், அங்கிருந்து சரியான முறையில் தகவல்கள் வரவில்லை என்றால்,நூறுவிதமான வதந்திகள் பரவத்தான் செய்யும். ஆனால் வதந்திகள் வருவது தவறுதான்.இது போல வதந்திகள் வரக்கூடாது.அம்மா ஜெயலலிதா அவர்கள்,கூடிய சீக்கிரத்தில் குணமாகி மீண்டும் வீட்டிற்கு வரவேண்டும் என்று நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகிறோம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.