ஐந்து மாநிலங்களில் உள்ள 10 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி 29% ஸ்வச் பாரத் கழிப்பறைகள் வெறும் காகித அளவில் தான் உள்ளன என்றும் மேலும் 30% பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கைக்காக ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான்,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மற்றும் பீகார் மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்விற்காக ஸ்வச் பாரத் குறித்த சாதனைப் பட்டியல் இந்திய அரசின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை நேரில் சென்று பார்ப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இதில் முதல் தடையே பல பெயர்கள் இந்தப் பட்டியலில் இருமுறை குறிப்பிடப்பட்டிருப்பது என்பது.
இது குறித்து இந்த ஆய்வை நடத்திய Accountability Initiative அமைப்பைச் சேர்ந்த யாமினி ஐயர் கூறுகையில், இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது குறித்து அவை உண்மையாகவே சரிவர செயல்படுத்தப் பட்டிருக்கின்றனவா என்று அரசு தணிக்கை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஸ்வச் பாரத் குறித்து தாங்கள் ஆய்வு நடத்திய பத்து மாவட்டங்களில் சிறப்பானது மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டம் என்றும் இதில் மிகவும் மோசமானது பீகார் மாநிலத்தின் நலந்தா மாவட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் அரசின் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமல்லாது வேறு சிலரைக் குறித்தும் ஆய்வு நடத்தியாகவும் அதில் பலர் இன்னமும் திறந்த வெளியில் மலம் கழிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பழக்கம் நலந்தாவிலும் உதைபூரிலும் அதிகாமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தங்கள் வீட்டில் கழிவறை கட்டியவர்கள் ரூபாய் 10000 இல் இருந்து 12000 வரை அரசிடம் விண்ணப்பித்து பெற முடியும். ஆனால் அப்படி விண்ணப்பித்தவர்களில் 40% மக்களுக்கு அது இன்னும் கிடைக்கப்பெறவில்லை. பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வரான வசுந்தரா ராஜேவின் தொகுதியில் 40% மக்களும் குறைவானவர்களுக்கே இந்த நிதி கிடைத்துள்ளது. உதைபூரில் இந்த நிதி உதவிக்கு தகுதியானவர்களில் வெறும் 18% மக்களே இதற்காக விண்ணப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் இருக்கின்றனர்.
அதே போன்று இந்த திட்ட அறிவிப்பின் பிறகு கட்டப்பட்ட கழிப்பறைகளுக்கான நிதியுதவி பீகாரின் நலந்தா மற்றும் புர்னியா பகுதிகளில் மிக குறைவாக உள்ளது. இந்த பகுதிகளை தான் தங்களது அறிக்கையில் மிக மோசமான பகுதி என்று Accountability Initiative குறிப்பிட்டிருந்தது.
மொத்தத்தில் இந்த ஸ்வச் பாரத் திட்டம் எந்த பகுதிகளுக்கு அதிகம் தேவையோ அங்கு மிக மோசமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று யாமினி ஐயர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.