சென்னை தண்ணீர் லாரிகளின் நிலை இதுதான்! அதிர்ச்சி நிலவரம்அந்நியனும் இந்தியனும் திரைப்படம் அல்ல, நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புதான். அந்தப் படங்களில் ஊழலும் லஞ்சமும் எப்படி சாதாரண மக்களின் உயிரைக் குடிக்கிறது? என்பதை கதைக்களம் ஆக்கியிருப்பார்கள். நம்முடைய நிஜ வாழ்விலும் அதுபோன்ற சம்பவங்கள் அன்றாடம் அறங்கேறி வருகின்றன . அதுபோன்றதொரு விபத்து தான் கடந்த 13 -ம் தேதியன்று செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழக்கக் காரணமானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..
கிண்டியில் இருந்து சின்னமலை நோக்கி சென்ற தண்ணீர் லாரி கட்டுபாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் காயத்ரி, ஆஷா சுருதி, சித்ரா ,ஜெயஸ்ரீ, மீனா ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது .
மேலும் அந்த லாரி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தாறுமாறாக ஓடியதில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஆமணகுட்டன் மற்றும் தேவராஜ் என்பவர் மீதும், திருமங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரின் ஆட்டோ மீதும் மோதியது. இவ்விபத்தில், சம்பவ இடத்திலேயே காயத்ரி, ஆஷா சுருதி, சித்ரா ஆகிய 3 மாணவிகளும் உயிரிழந்தனர் . ஆமணக்குட்டன் , தேவராஜ் ,ஜெயஸ்ரீ, மீனா ஆகியோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
விதிகளை மீறியது யார் ?
இந்த கோர விபத்தில் சிக்கியவர்கள் அனைவருமே சாலை விதிகளை மீறி நடந்து சென்றவர்கள் அல்ல . கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நின்றிருந்த ஆட்டோ மீதும் இருசக்கர வாகனங்களில் சென்ற ஆமணகுட்டன்., தேவராஜ் மீதும் மோதியுள்ளது. அதுமட்டுமின்றி சாலை ஓரத்தில் நடைபாதையில் நடந்து சென்ற அந்த மாணவிகள் மீதும் மோதியுள்ளது. "உயிரிழந்த மாணவிகள் விதிகளை மீறி நடந்து கொண்டதால் ஏற்பட்ட விபத்து அல்ல இது. இங்கே விதிகளை மீறியது யார் ? இந்த லாரி பிரேக் பிடிக்காமல் போனதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? தண்ணீர் லாரிகளை பராமரிக்காமல் இருந்தது யாருடைய கவனக்குறைவு? விபத்து ஏற்படுத்திய லாரியை ஒட்டியவர் முறையான ஓட்டுநர் பயிற்சி பெற்றவரா ? ஓட்டுந◌ா உரிமம் பெற்றிருந்தாரா? ஓட்டுநருக்கான சீருடை அணிந்திருந்தாரா?" இப்படி பல கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்க வேண்டும்? "பொற்பேற்க வேண்டியவர்கள், லஞ்ச, ஊழலில் திளைத்திருப்பதே இதுபோன்ற கோர விபத்துக்கள் நடக்க காரணம்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் .
கிளினர்களே லாரிகளை ஓட்டும் அவலம்!
சென்னையில் மட்டும் சுமார் 450-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் உள்ளன. இதில் அனைத்து லாரிகளும் திறந்தவெளி ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, தனியார் லாரி உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் போடப்படுகின்றன. அப்படி ஒப்பந்தம் செய்யும் ஒப்பந்தாரர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு, லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களுடன் லாரிகளை சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்திற்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமின்றி இந்த லாரியை பராமரிப்பபதும் தனியார் ஒப்பந்ததாரர்களின் பணியாக உள்ளது.
இது தொடர்பாக, அண்ணாநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தின் ஓய்வுபெற்ற மேலாளர் நடராஜனிடம் பேசினோம். " லாரிகள் ஒப்பந்த உரிமம் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும். ஒரு நடைக்கு (டிரிப்) 420 ரூபாய் வழங்கப்படுகிறது . இந்த தொகையில், ஓட்டுநர்களுக்கு 35 ரூபாயும் கிளினருக்கு 15 ரூபாயும் தரப்படுகிறது. 3 ஆண்டுகள் கிளினராக இருப்பவர்களை, ஒப்பந்ததாரர்கள், ஓட்டுநர்களாக அனுப்பி விடுகிறார்கள் . இவர்களுக்கான ஓட்டுநர் உரிமத்தை, லஞ்சம் கொடுத்து ஆர் .டி. ஓ-வில் வாங்கி விடுவார்கள் . இதையல்லாம் கவனிக்க வேண்டியது சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் வேலை. ஆனால் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது தான் இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்கக் காரணம். குறிப்பாக ஒரு ஃபில்லிங் பாய்ண்டில் உள்ள பகுதி பொறியாளர் இதனைக் கண்காணிக்க வேண்டும் . ஆனால் அவர்கள் அந்தப் பகுதியில் இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் ஒப்பந்தாரர்களிடம் இருந்து பணம் வருவதாக இருந்தால் அங்கு இருப்பார்கள் . பணம் வந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்" என்று தெரிவித்தார்.
பெரும்பாலும் டைம் கீப்பர்களே லாரிகளை எண்ட்ரி போட்டு அனுப்புகின்றனர். ஏதாவது குறைபாடுகள் இருந்தால் டைம் கீப்பர்களுக்கும் பணத்தை கொடுத்து சரி கட்டிவிடுவதாகத் தெரிவிக்கிறார் அவர். புதிய வண்டியாக இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் , பழைய வண்டியாக இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையும் முழுமையாக பழுதை சரிபார்க்க வேண்டும். அதையெல்லாம் எந்த ஒப்பந்தாரர்களும் செய்வதில்லை. வண்டியை குறிப்பிட்ட இடத்தில் இருந்து இயக்கும் போது, அதனை பகுதி பொறியாளர் முழு திறனுடன் உள்ளதா ?என்று காண்காணித்து கையெழுத்திட்டு அனுப்புவது கடமை. சில நேரங்களில் வண்டிகள் பழுது பார்க்கப்பட்டதாக ஆர். டி. ஓ-விடம் போலியாக சான்றிதழ் வாங்கிவிடும் நிகழ்வுகளும் நடைபெறுவதுண்டு என்றும் தெரிவிக்கின்றனர் இத்தொழிலில் உள்ளவர்கள்.

சூழல்களை சமாளிக்க வேண்டும் !
இதுதொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் தண்ணீர் லாரி ஓட்டுநரான ராஜனிடம் பேசினோம். "அந்த விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்து முழு விவரத்தை கேட்டுள்ளோம் .சரி வரத் தெரியவில்லை. வண்டி சரியாக இருந்தால் கூட சூழல்கள் சில நேரத்தில் விபத்தை ஏற்படுத்தி விடுகிறது . அந்த சூழலை சமாளிக்க வேண்டும். வண்டி பிரச்சனையாக இருந்தாலும் அதனை எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் அல்லது உயிரிழப்புகளை தடுக்க கூடிய சமயோசிதமான யுத்திகளையாவது எப்படி கையாள்வது என்பது குறித்து ஓட்டுநர்கள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் . தண்ணீர் லாரி என்பதால் வெயிட் இருக்கும் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு போகும் வாய்ப்பும் அதிகம். அதனை கையாளக்கூடிய மனப்பக்குவமும், அனுபவமும் இருக்க வேண்டும். அனுபவத்தில்தான் அதனைக் கற்றுக்கொள்ள முடியும். எனவே பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை பணியமர்த்துவதே சிறந்தது" என்றார்.
பொறுப்பேற்றதா ? சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம்
இது தொடர்பாக குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, திரைப்படங்களில் கூறுவதுபோல், "எங்களுக்கு அதற்கும் தொடர்பில்லை. நீங்கள் அந்த அதிகாரிக்கு பேசுங்கள்" என்று வெவ்வேறு துறை அதிகாரிகளைக் கூறி தப்பித்தனர். மற்றொரு அதிகாரி, "இந்த விபத்து எந்த பூத் தொடர்புடையதோ அங்கு பேசுங்கள்" என்றார்.
சாலைகள் பலி பீடங்களா?
சமூக ஆர்வைலர் பாடம் நாரயணனிடம் பேசினோம். "தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 70 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் . ஒரு நாளைக்கு தமிழகத்தில் மட்டும் 44 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள் . இதற்கு எல்லாம் காரணம் அரசு இயந்திரம் சரிவர செயல்படாமல் போனதே. மாநகராட்சிகளில் உள்ள குப்பை லாரிகள் மற்றும் குடிநீர் வழங்கல் வாரியத்தில் உள்ள லாரிகள் பராமரிப்பு இல்லை. அதை கண்காணிக்க அரசு துறைகளில் போதிய ஆட்களும் இல்லை. ஒவ்வொரு விபத்து நேர்ந்த பிறகு தான் அதைப்பற்றி பேசுகிறோம் . பிறகு இரண்டொரு நாட்களில் கலைந்து சென்று விடுகிறோம். இது போன்ற பிரச்சனைகளை களைய அனைவருமே இணைந்து அரசு துறைகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். எத்தனை முறை விபத்தில் இருந்து பாடம் கற்பது? இதையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் லஞ்சம் வாங்கி கொண்டு அமைதியாக இருந்து விடுவதே விபத்துக்களுக்கு காரணம் " என்றார்
விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை என்ற பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி அந்த ஓட்டுநருக்கு தண்டனை வழங்கப்படலாம். ஆனால் சட்டத்தின் ஓட்டைகள் 3 மாதங்களில் அவரை விடுவித்து லைசன்சை திருப்பி கொடுத்து விடும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்
இந்த இந்த விபத்தில் உயிரிழந்த மாணவிகள் அனைவருமே மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பின் தங்கிய குடும்பத்தில் இருந்து படித்த மாணவிகளின் கனவுகளுக்கு அரசு வண்ணம் திட்டவில்லையென்றாலும். அவர்களின் வாழ்கையை இருட்டாக்கி அழித்து விட்டதே என்பது அனைவரின் வேதனையாக உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.