இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால் இப்படி அச்சு குலையாமல் அந்த உடல் கிடைத்தது.
இந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்த இடத்தை 'ஊட்ஸல் ஆல்ப்ஸ்' என்று அழைப்பார்கள். அதைக் காரணமாக வைத்து அந்த மம்மி மனிதனுக்கும் 'ஊட்சி' என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது என்ன தெரியுமா? சிவப்பு மானின் இறைச்சி. அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்ததையும், அவருக்கு பல்வேறு எலும்புப்பிரச்சினைகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள். ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்ததையும், அப்போது அவருக்கு வயது 45 என்பதையுமே கண்டுபிடித்துவிட்டார்கள். இதைவிட கூடுதல் தகவல் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர் மனவேதனையுடன் இருந்ததையும் விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப்போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.
இதையெல்லாம் கண்டு பிடித்துள்ள விஞ்ஞானிகள் மற்றொன்றையும் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஊட்சியின் குரல் தடத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பனி மனிதனின் குரலின் மூலம் உலகின் எந்த மொழியையைம் பேச வைக்க முடியும் என்கின்றனர் அழுத்தமாக.
பொதுவாக மம்மிக்கள் கிடைத்தால் பல்வேறு ஸ்கேனிங்களை பயன்படுத்தி ஏதேனும் வித்தியாசமாக கண்டுபிடிப்பது வழக்கம். இம்முறை ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினை உருவாக்கி விட்டனர். அதாவது ஊட்சி குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என ஒரு டெமோ ரெடி.. அது நம் தமிழைப் போன்றே ஒலிக்கிறது.
"ஆ, ஈ, உ ஊ" ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது. அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. அப்படி இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ பைல் வெளியாகியுள்ளது.
டிஸ்கவரி சேனலின் தொல்லியல்துறை பொறுப்பாளரான ரோசல்லா லோரன்ஸி இதை யூடியூபில் வெளியிட்டுள்ளார். ஊட்சியின் குரல் தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பது போன்றே உள்ளதுதான் இதில் சிறப்பே!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.