Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 6, 2016

இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்


ஒவ்வொரு பெண்ணும் முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி... அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும்.

இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும். முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது கர்ப்பத்தில் பக்க விளைவுகளாக எதிரொலிக்கலாம்.

இரண்டாவது கர்ப்ப காலத்தில் களைப்பு மிக சாதாரணமாக ஏற்படும். முதல் கர்ப்பத்தில் கூட நீங்கள் இவ்வளவு களைப்பை அடைந்திருக்க மாட்டீர்கள்.

முதுகு வலி என்பது எந்த கர்ப்பத்தின் போதும் இயல்பாக வந்து வருத்தும். இரண்டாவது கர்ப்பத்தில் இந்த வலி இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குனியும் போது கூட, முழங்கால்களை மடக்கித் தான் குனிய வேண்டுமே தவிர, முதுகை வளைத்துக் குனியக் கூடாது.

ஒவ்வொரு கர்ப்ப காலத்தின் போதும் இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் திடீரென்று நரம்புகள் பின்னிக் கொள்ளும். எப்போதும் கால்களை நீட்டி வைத்துக் கொள்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலமும் இதைச் சரி செய்ய முடியும்.

உங்கள் முதல் கர்ப்பத்தின் போது நீரிழிவு ஏற்பட்டிருந்தால், இரண்டாவது கர்ப்பத்திலும் இது பக்க விளைவாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் நீரிழிவைத் துரத்தியடிக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.