Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 24, 2016

சுயமரியாதையை இழக்க நீங்க தயாரா..? அப்ப செல்ஃபி எடுங்க..!


ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்த அவரவர் செல்ஃபி புகைப்படங்களையோ அல்லது மற்றவர்களது செல்ஃபி புகைப்படங்களையோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, வாழ்க்கையில் ஒருவகையான திருப்தியின்மை நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்து உள்ளது.

விதவிதமாக செல்ஃபி எடுத்து, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதனை போஸ்ட் செய்வதில் இளைஞர்களிடம் தற்போது மோகம் அதிகரித்துள்ளது. இதனிடையே, செல்ஃபி கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள இளம் தலைமுறையினர் உணர்ச்சிகளை மதிக்காதவர்களாக மாறிவிடுகின்றனர் என்கிறது சமீபத்தில் ஓர் ஆய்வு.

மற்றவர்கள் போஸ்ட் செய்திருக்கும் செல்ஃபி புகைப்படங்களை லைக் அல்லது ஷேர் செய்யாமல் அதனை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் சுய மரியாதையை இழப்பதோடு வாழ்க்கையில் திருப்தியின்மை ஏற்படுவதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ரௌக்சு வாங் தெரிவித்துள்ளார். டெலிமாட்டிக்ஸ் மற்றும் தகவலியல் பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.