திமுக எம்.பி திருச்சி சிவாவை எந்த நேரத்தில் கன்னத்தில் அறைந்தாரோ அந்த நிமிடத்திலிருந்து பரபரப்பும் பதற்றமுமாகவே ஒடிக்கொண்டிருக்கிறார் சசிகலா புஷ்பா. ஜெயலலிதாவைப்பற்றி பரபரப்பான கருத்துக்களை நாடாளுமன்றத்தின் நடுமையத்தில் நின்று சொன்ன அந்த நொடி முதல் அவரை வழக்குகள் துரத்திக்கொண்டிருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ளநிலையிலும் விடாது கருப்பாய் அது தொடர்வதுதான் சோகம்.
சசிகலா புஷ்பாவின் அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட டெல்லி விமான நிலைய சம்பவத்தில் இன்னமும் அதுதொடர்பான எந்த வழக்கும் பதிவாகவில்லை என்பதுதான் ஆச்சர்யமூட்டும் இன்னொரு தகவல். சமூக ஆர்வலர் வாராகி அதைத்தான் கையில் எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார் இப்போது.
கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்ப, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க. எம்.பி சசிகலா புஷ்பாவும் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசிக் கொண்டதோடு ஒருகட்டத்தில் திருச்சி சிவாவின் கன்னத்தில் சசிகலா புஷ்பா அறைந்தார்.
இதைக்கண்ட விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். டெல்லி விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இரு எம்.பிக்கள் விமானநிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தி.மு.க. எம்.பியுடன் மோதலில் ஈடுபட்ட சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இந்த சம்பவத்துக்குப் பிறகு மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யும்படி தனது கட்சித் தலைமை தன்னை நிர்பந்திப்பதாக கூறியவர், தன்னை ஜெயலலிதா அறைந்தார் எனக்கூறி அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். அதன்பின் தொடர்ந்து நாலாதிசைகளிலிருந்தும் சசிகலா புஷ்பா மீது புகார்கள் படையெடுத்தன. அவரது கணவர், மகன் உள்ளிட்ட உறவினர்கள் மீது பணமோசடி முதல் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வரை கொடுக்கப்பட்டன. இருப்பினும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சற்று நிம்மதியடைந்துள்ளார் இப்போது.
இந்நிலையில் இத்தனைக்கும் காரணமான டெல்லி விமானநிலைய சம்பவத்தின் மீது எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வியுடன் புதுடெல்லி காவல் ஆணையர் அலுவலக கதவை தட்டியுள்ளார் வாராகி. டெல்லி விமான நிலையத்தில் இரண்டு எம்.பிக்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் இருவர் மீதும் வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் இவர்.
வாராகியிடம் பேசினோம். “கடந்த ஜூலை 30-ம் தேதி பிற்பகலில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும்பொது இடத்தில் திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் திருச்சி சிவாவை அவரது கன்னத்தில் அறைந்தார் சசிகலா புஷ்பா. ஆரம்பத்தில் வதந்தி எனக் கூறப்பட்ட நிலையில் அதை மறுதினம் சசிகலா மாநிலங்களவையில் இதற்காக சிவாவிடம் மன்னிப்பு கேட்டார். சிவாவும் இந்த சம்பவம் நடந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே இவர்கள் இருவர் தொடர்பான ஆடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது நினைவிருக்கலாம். இப்போது இந்த சம்பவம். ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவு அவர்களிடையே என்ன பிரச்னை இருந்தது என்பது பற்றி நான் உள்ளே புக விரும்பவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விவகாரம். ஆனால் ஒரு பொது இடத்தில் பல அடுக்கு பாதுகாப்பு உள்ள ஒரு இடத்தில் இந்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரம் படைத்த ஒரு மன்றத்தின் உறுப்பினர்கள் தாக்கிக்கொண்ட விவகாரம் எத்தனை அசிங்கமானது. இதனால் தமிழகத்தின் மானம் மரியாதை போனது.
மக்கள் பிரதிநிதிகளான இருவரும் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவம், விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில்தான் நடந்தது. எம்.பிக்கள் நடந்துகொண்ட விதம் இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் வரும் குற்றம். ஆனால், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் இதுவரை புகார் பதிவு செய்யவில்லை.
சாதாரண சாமான்யன் யாராவது இப்பகுதியில் இப்படி நடந்து கொண்டிருந்தால் அவர்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பதும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் பாதுகாப்புப் படையினரின் கடமை. ஆனால், உயர் பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் இரு எம்.பி.க்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாததில் உள்நோக்கம் உள்ளதாகவே கருதுகிறேன். இதுதொடர்பாக நான் டெல்லி விமானநிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினேன்.
இறுதியாக உயரதிகாரிகளிடம், எம்.பிக்கள் மீது வழக்கு பதியாதது ஏன் எனக்கேட்டதற்கு, 'புகார் எதுவும் வரவில்லை' என்றனர். 'இதே இடத்தில் வேறு யாரோ இரு சாமான்யர்களாக இருந்தால் வழக்கு பதியாமல் விட்டிருப்பீர்களா?...' என்றதற்கு அவர்களிடம் எந்த பதிலுமில்லை. சாமான்யனுக்கு ஒரு சட்டம் அதிகார வர்க்கத்தினருக்கு தனி சட்டமா என்பதுதான் என் கேள்வி. இதன் பிறகுதான் நேற்று டெல்லி ஆணையரிடம் புகார் அளித்தேன்.” என்றார்.
தொடர்ந்து பேசிய வாராகி,“ நான் அளித்த புகாரின்பேரில் இப்போது சம்பந்தப்பட்ட விமான நிலையத்திலிருந்து சிசிடிவி ஃபுட்டேஜ்களை கேட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அந்த விடியோ காட்சிகளைப் பார்வையிட்டபின், இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
“எப்போதோ நடந்து முடிந்துபோன விஷயத்தை இப்போது கிளற வேண்டிய அவசியமென்ன...சசிகலா புஷ்பா மீதான அ.தி.மு.க. மேலிடத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளின் வரிசையில் அக்கட்சியின் மேலிடத்தை திருப்தி செய்ய இப்படி செய்கிறீர்களா“...என்றோம்.
“நான் கடந்த பல வருடங்களாக சமூகத்துக்கு எதிரான பிரச்னைகளுக்கு பொதுநல வழக்கு போட்டுவருகிறேன். மதம், இனம். கட்சி பேதங்கள் இன்றி இதை செய்துவருகிறேன். அதிகார வர்க்கத்தினரை எதிர்த்து ஒரு சாமான்யன் கேட்கமுடியாத இடங்களில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதை நான் செய்துவருகிறேன். சட்டத்துக்குப் புறம்பாக எந்தவொரு விஷயத்திலும் நான் போராடுவேன். இப்படி என் ஒவ்வொரு போராட்டத்துக்கும் யாரோ ஒருவர் பின்னணியாக இருப்பதாக சொல்லக் கேட்டு கேட்டுப் புளித்துப்போய்விட்டது. எனக்கு அதிமுகவை திருப்திப்படுத்தவேண்டிய அவசியமில்லை“ என்று முடித்தார்.
தமிழகத்தின் மானம் விமானம் ஏறி தலைநகர் போயிருக்கிறது. வேறென்ன சொல்ல!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.