October 4, 2016
RSS சீருடை அணிவகுப்பு நடத்திக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி!
மக்களின் உணர்வுகளைப் பாதிக்காத வகையிலும், காவல் துறையின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் RSS சீருடை அணிவகுப்பு நடத்திக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ராமானுஜர் ஜெயந்தி, அம்பேத்காரின் 126 வது பிறந்த நாள் மற்றும் விஜயதசமியை கடைபிடிக்கும் விதமாக கோவை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 இடங்களில் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, RSS சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அரசுத்தரப்பில் அளித்த பதில் மனுவை பார்த்த நீதிபதி, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால், இந்த மாதம் சீருடை அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுள்ளது.
RSS தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நவம்பர் 6 அல்லது, 13 ம் தேதி அணிவகுப்பு நடத்த அனுமதிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து, அணிவகுப்பின்போது, முழுக்கால் சட்டை அணிய வேண்டும், கையில் லத்தி பயன்படுத்தக் கூடாது என்பது உட்பட காவல்துறையின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனக்கூறி, நவம்பர் 6 அல்லது 13 ம் தேதிகளில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
RSS சீருடை அணிவகுப்பு நடத்திக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.