Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 29, 2016

புது வீடு, புது ரிக்‌ஷா, பென்ஷன் சலுகை…. ஹேப்பி ரிக்க்ஷாகாரர்!


எல்லா சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்களும் வியப்போடு பார்க்கும் படி ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுனர் ஒரு வேலை செய்துள்ளார். சவாரி ஒன்றிற்காக முதலமைச்சரின் காரைத் தாண்டி சென்று முதல்வர் மாளிகையின் முகவாயிலில் நிறுத்தியுள்ளார் தனது ரிக்‌ஷாவை... இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அதன் பிறகு தான் ஆச்சர்யமே…. உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களின் குடியிருப்புக்கு வாசலில் தனது ரிக்‌ஷாவை நிறுத்தியுள்ளார் ரிக்‌ஷாக்காரர் மணிராம். அதிலிருந்து இறங்கியவரை கண்டு அனைவருக்குமே ஆச்சர்யம்….. இவ்வளவு பெரிய மனிதர் ரிக்‌ஷாவில் வந்துள்ளாரே என எல்லோரும் வியப்பாகியுள்ளனர்.

PAYTM தலைமை நிர்வாகிக்கு ரிக்‌ஷா:

அப்படி மணிராமின் சவாரிக்கு கிடைத்தவர் யார் தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு. விஜய் ஷேகர் அவர்கள்….. PAYTMன் தலைமை நிர்வாகி இவர்….. முதலமைச்சர் கையில் இருந்து யாஷ் பாரதி விருது வாங்கிய பின்னர் அவரைப் பார்க்க நேரில் சென்ற போது வழியில் கார் ட்ராஃபிக்கில் சிக்கிக்கொள்ள, ரிக்‌ஷா தேடியுள்ளார். அங்கு தான் மணிராமை சந்தித்துள்ளார். எவ்வித இடர்பாடும் இன்றி ரிக்‌ஷாவில் அலேக்காக விஜய் ஷேகரை கூட்டிச் சென்றுள்ளார் மணிராம்.

ஹேப்பி சலுகைகள்:

ரிக்‌ஷாவில் விஜய் ஷேகரை ஏற்றிய பிறகு மணிராமின் வாழ்வில் நடந்தவை எல்லாம் அதிசயங்கள் தான். டிலாய்வை சேர்ந்த இவரது பயோடேட்டாவை அம்மாநில முதல்வரே விசாரித்துள்ளார். மணிராம் எங்கு வசிக்கிறார், அவரது குடும்பம், குழந்தைகள், சம்பளம் என அனைத்தையும் விசாரித்த பின்னரே அங்கிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் மணிராம்….. முதல்வரின் ஆணைக்கினங்க தீபாவளிக்காக கையில் 6000 ரூபாய் பணமும், ஒரு புது ப்ராண்டட் ரிக்ஷாவும் பரிசாக அளிக்கப்பட்டு, அவர் குடும்பத்திற்கு சமாஜ்வாடி சார்பில் பென்ஷனும், தங்குவதற்கு லக்னோவில் அழகான வீடும் தரப்பட்டுள்ளது.

மணிராமின் சந்தோஷம்….:

இது குறித்து ரிக்ஷா ஓட்டுனர் மணிராம் கூறும் போது, “சவாரிக்கு அவர் கூப்பிடும் போது புகைபிடித்துக் கொண்டிருந்தேன்…..  யாரோ ஒரு  ஷவாரி போட்ட மனிதர் சவாரிக்கு கூப்பிடுகிறார் என்று தான் அவரை ஏற்றி சென்றேன். ஏதோ ஒரு பெரிய பங்களாவில் இறக்கிவிட சொன்னார், நானும் இறக்கிவிட்டேன். வாயிலில் இறக்கிவிட்டேன்… சவாரிக்கு ஏறியவர் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் பேசினார், அவர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர். அந்த பங்களாவிற்குள் இதுவரை நான் சென்றதில்லை. உள்ளே சென்ற போது தான் அங்கே தான் அமைச்சர்களைக் கண்டேன், அதன் பிறகு எல்லாமே தன்னாலயே நடந்துவிட்டது” என்கிறார் சந்தோஷத்தோடு. இந்த தீபாவளி மணிராமிற்கு அதிர்ஷடதோடு கூடிய சந்தோஷ தீபாவளி தான்…..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.