இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது தி.மு.க. ' மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. அரவக்குறிச்சியில் போட்டியிட தானாகவே வாய்ப்பு கேட்டார் கே.சி.பி' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19 அன்று இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது அ.தி.மு.க. தி.மு.கவில் விருப்பமனு பெறும் வேலைகள் நடந்து வந்தன. இன்றைக்கு அறிவாலயத்தில் நடந்த நேர்காணலின் முடிவில், திருப்பரங்குன்றத்துக்கு டாக்டர்.சரவணனும் மற்ற இரு தொகுதிகளுக்கும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே களமிறக்கப்பட்டுள்ளனர். ' போட்டியிடும் முடிவில் இருந்து ஒதுங்கி இருந்தார் கே.சி.பி. பிறகு எப்படி களத்திற்குள் வந்தார்?' என தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.

" சட்டமன்றத் தேர்தலின்போது அரவக்குறிச்சியில் 'போதுமான' அளவுக்குத் தேர்தல் வேலை பார்த்துவிட்டார் கே.சி.பழனிச்சாமி. ' அ.தி.மு.கவின் செந்தில் பாலாஜியைத் தோற்கடிப்பார்' என உறுதியாக நம்பினோம். அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதன்பிறகு, கரூர் மாவட்ட ஒன்றியச் செயலாளர்களை அழைத்துப் பேசிய பழனிச்சாமி, ' தலைமை சொன்னாலும், போட்டியிடப் போவதில்லை' என உறுதியாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ' தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், கே.சி.பியை சமாதானம் செய்ய முடியுமா' என நிர்வாகிகள் யோசித்தனர். அவரிடம் பேசும்போதும், ' இது ஒரு முக்கியமான காலகட்டம். நீங்கள் கட்டாயம் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தினர். அவர் எதுவும் சொல்லவில்லை. இதன்பின்னர், கட்சியின் சார்பில் விருப்பமனுக்கள் வாங்கும் வேலைகள் நடந்து வந்தன. அவர்களில் 23 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. ' எதாவது மாற்றம் இருக்கலாம்' என யோசித்த கே.சி.பி, மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மூலம், ' மீண்டும் போட்டியிட விரும்புகிறேன்' என தலைமைக்குத் தகவல் தெரிவித்தார்.
நேற்று மதியமும் மாவட்ட செயலாளருக்குப் போன் செய்து, ' எந்த மாற்றமும் இல்லையே' என விசாரித்தார். ஒருவேளை நேர்காணல் நடத்தப்பட்டு வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால், ' கட்சித் தலைமையே கே.சி.பியை ஓரம்கட்டிவிட்டது' என பொதுமக்கள் பேச ஆரம்பித்துவிடுவார்கள். தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுவிடும் என்பதால், போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தார். நாங்கள் யாரும் அவரை நிர்பந்தப்படுத்தவில்லை" என்றவர், " தஞ்சாவூரில் ராஜ்குமார் நிறுத்தப்படுவார் என வதந்திகள் வலம் வந்தன. அங்கு பழனிமாணிக்கத்துக்கு தலைமை போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 'அஞ்சுகமே நிற்கட்டும்' என தலைவர் உறுதியாகக் கூறிவிட்டார்.
அதேபோல், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.கவின் ஏ.கே.போஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிடக்கூடிய அளவுக்கு, ' சமுதாய பலம் பிளஸ் பணபலத்தோடு வேட்பாளர் வேண்டும்' என்பதால் டாக்டர் சரவணன் தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட மணிமாறன், 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்தமுறை, தொகுதிக்குள் சிறப்பாக வேலை பார்த்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். சரவணன் மாற்றுக் கட்சிகளில் இருந்தார்; அவர் மேல் வழக்கு உள்ளது என்றெல்லாம் உள்ளூரில் எதிர்ப்பு கிளம்பியது. ' தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டியது உங்கள் கடமை' என ஸ்டாலின் உறுதியாகக் கூறிவிட்டார். இப்படித்தான் மூவருக்கும் சீட் கிடைத்தது" என விவரித்து முடித்தார்.
குற்றச்சாட்டுக்கு ஆளான வேட்பாளர்களையே தி.மு.கவும் அ.தி.மு.கவும் முன்னிறுத்தியுள்ளன. இடைத்தேர்தலின் ஆட்டத்தைக் கவனிக்கத் தொடங்கியுள்ளனர் தொகுதி மக்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.