பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தொடர்ந்து, ரயில்வே துறையும் சமீபகாலமாக அதையே பின்பற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'சுவிதா ரயில்' என்ற பெயரில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், சொகுசு வசதிகள் கூடிய பெட்டிகள் மட்டுமே இருக்கும். பண்டிகை காலங்களில் மட்டுமே இயக்கப்படும் இவ்வகை ரயில்களில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இருப்பதால், ஆம்னி பஸ்கள் கிடைக்காத பயணிகள் இவ்வகை ரயில்களில் பயணிக்கின்றனர். தனியார் பேருந்துகளைப் போல் அரசாங்கத்தால் இயக்கப்படும் ரயில்களிலும் இதைப்போல் அதிகக் கட்டணம் வசூலிப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில், சுவிதா ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.