Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 29, 2016

ராம்குமாரை கண்காணித்த புழல் சிறை அதிகாரி திடீர் சஸ்பெண்ட்


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை கண்காணித்து வந்த சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்போது, ராம்குமாரை, புழல் இரண்டாவது சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் கவனித்து வந்தார். இந்த நிலையில், முறைகேடு புகார் அன்பழகனை இன்று சிறைத்துறை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

கோவையில் ஜெயிலராக அன்பழகன் பணியாற்றியபோது உணவுப்பொருட்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். புழல் சிறையில் இரண்டாம் சிறையின் கண்காணிப்பாளராக அன்பழகன் இருந்து வந்தார். இந்த மாதத்துடன் அன்பழகன் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசு திடீரென அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.