Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 12, 2016

”அம்மாவைப் பார்க்க அப்போலோவுக்கு போனேன்!” - பார்த்ததை சொல்கிறார் பவர்ஸ்டார்


'என்ன பத்தியே ஏகப்பட்ட வதந்தி வருது. 5 ஆயிரம் கோடி ,பத்தாயிரம் கோடி வச்சி இருக்கேன்.அப்படி இப்படின்னு கிளப்பி விடுறாங்க. கோடி எல்லாம் கவர்மெண்ட்கிட்ட இருக்கும். நம்மட்ட இருக்குமா? இது தெரியாம சிலபேரு கிளப்பி விடுறான்.எனக்கே எப்படின்னா அம்மாக்கு எல்லாம் சொல்லவா வேணும்? ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். அம்மா உடல் நிலை குறித்து வதந்தி பரப்பினா பல உயிர்ச்சேதம் ஏற்படும்.அதனால வதந்தியை பரப்புபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” சீரியஸாக பொங்குகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள தமிழக முதல்வரை காண பல்வேறு அரசியல் தலைவர்கள், அப்போலோ வந்து செல்கின்றனர். பவர் ஸ்டார் எப்போதுமே பவர் புல் தான்.முதல்வரை அப்போலோ மருத்துவமனையில் சந்தித்து விட்டு வந்தவரை நாம் சந்தித்தோம்

உங்கள முதல்வரை சந்திக்க விடலைன்னு சொல்றாங்க ?

அது எல்லாம் பொய்ங்க. பாண்டிச்சேரி கவர்னர் வர்றாருன்னு முதல்ல உள்ள விடல.  கொஞ்ச நேரம் கார்ல வெயிட் பண்ணேன்.  அதுக்கு அப்புறம் அவங்களே போன் பண்ணி கூப்பிட்டாங்க. அப்புறம் நான் போய் அம்மாவ பாத்துட்டு வந்தேன்.

ஜெயலலிதாவை சந்திச்சிட்டிங்களா?

இரண்டாவது மாடிக்கு போனேன் அங்க எல்லாரும் உக்காந்து இருந்தாங்க.அவங்ககிட்ட முதல்வரோட உடல்நிலையை பற்றி கேட்டேன். இப்ப நல்லா இருக்காங்கன்னு சொன்னாங்க அதுவே போதும்ன்னு கிளம்பி வந்துட்டேன். மனிதாபிமானத்துல தான் போய் பாத்தேன். அவங்க நூறு வயசு வரைக்கும் நல்லா இருக்கனும்.அவங்க ஆட்சி செய்தால் மட்டும்தான் தமிழ்நாட்டுல பெண்கள் நிம்மதியா வாழ முடியும், கட்ட பஞ்சாயத்து ரௌடியிசம் எதுவும் இல்லாம இருக்கனும்ன்னா தமிழ்நாட்டுக்கு அம்மா வேணும்

நீங்க பாரதீய ஜனதா கட்சியில தான இருந்தீங்க ? இப்ப என்ன திடீர் முதல்வர் பாசம் ?

நான் அ.தி.மு.க வில் மாநில மருத்துவ அணி செயலாளரா இருந்தேன். அப்புறம்தான் பி.ஜே.பி போய் சேந்தேன்.இங்க ஒருத்தரும் மதிக்கமாட்டேங்குறாங்க.தேர்தலில் தமிழிசைக்காக தெரு தெருவாக பிரச்சாரம் செய்தும் கூட  கண்டுக்கல. மோடி தமிழ்நாடு வந்த போது அவரை சந்திக்க டைம் கேட்டு இருந்தேன். உங்க மேல வழக்கு இருக்கு அப்படின்னு சொல்லி ஓரம் கட்டிட்டாங்க .அரசியல்ல யாரு மேல தான் வழக்கு இல்ல? அப்படி பாத்தா காந்தி மட்டும்தான் அரசியல்ல இருக்க முடியும். ஆனா ஒரு நடிகையை கூட்டிட்டு போய் மோடியை சந்திக்க வைக்குறாங்க. இது எல்லாம் எனக்கு எவளோ பெரிய அவமானம்? அது தான் அ.தி.மு.க சேர்ந்துறலாம்ன்னு அப்போலோ வந்தேன். அம்மா சரியாகி வந்த அப்புறம் போய் கட்சியில சேர தான் போறேன் .


என்னது... உங்களுக்கே மரியாதை இல்லையா ?

ஆமா. அரசியலுக்கு வர்ற இளைஞர்களுக்கு ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.பேக்கிரவுண்டு இல்லாம அரசியல்ல இறங்காதிங்க.நண்பர்கள் உறவினர்கள்ன்னு தெரிஞ்சவங்க யாராவது இருந்த மட்டும் தான் அரசியலுக்கு வரணும் இல்லன்னா பலி கடா ஆக்கிருவாங்க.

நடிகர் சங்கத்துல பல பிரச்சனைகள் நடந்துகிட்டு இருக்கு அது எல்லாம் உங்க கவனத்துக்கு வந்ததா ?

சின்ன பசங்க அவங்களுக்கு தெரிஞ்சதை பண்ணிக்கிட்டு இருக்காங்க. கல்யாணம் ஆனா புதுசுல அப்படி தான ஒருத்தர ஒருத்தர் தாங்கிட்டு இருப்பாங்க. போக போக தான் தெரியும்.தமிழ் சினிமாவை பொறுத்த வரை இன்னைக்கு சின்ன படங்கள் வெளி வருவதில் பெரிய சிக்கல் இருக்கிறது.காமெடி நடிகர்கள் அனைவருமே பிஸியாக தான் இருக்கோம். ஆனால் படங்கள் தான் வெளிவர மாட்டேங்குது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.