எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் சென்று பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் எனப்படும் அதிரடி தாக்குதல்களை தற்போதுதான் ராணுவம் நடத்தியுள்ளது என்றும், இதற்கு முன்பு இப்படியொரு தாக்குதலே நடந்ததில்லை என்றும் மத்திய பாஜக அரசின் பாதுகாப்புத் துறைஅமைச்சர் மனோகர் பாரிக்கர் இடைவிடாமல் மார்தட்டி வந்தது அப்பட்டமான பொய் என்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாரிக்கரின் பேச்சுக்களை, வெளியுறவுத் துறை செயலாளரே அதிகாரப்பூர்வமாக மறுத்திருப்பது, மோடி அரசின் உயர்மட்டத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்ஜிக்கல் தாக்குதலை பகிரங்கப்படுத்தி, அதை வைத்து அரசியல் லாபம் தேட முயன்ற பாஜகவின் முகம் வெளிறி போயுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள உரி ராணுவமுகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, 19 வீரர்களை படுகொலை செய்த நிலையில், அதற்கு பதிலடியாக கடந்த செப்டம்பர் 29 அன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் சென்று, இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தானிய எல்லையில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் அதிரடியான சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இது இந்திய ராணுவத்தினர் மேற் கொண்ட பெருமைக்குரிய பதிலடி நடவடிக்கை என்ற போதிலும், மத்திய பாஜகஅரசு இதன்மூலம் தனது குறுகிய அரசியல் லாபத்தை அறுவடை செய்யும் முயற்சியில் இறங்கியது. வழக்கமாக இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்டு என்ற போதிலும், அது பகிரங்கப்படுத்தப்படுவது இல்லை. ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும், பாஜகதலைவர் அமித்ஷாவும், இதர பல அமைச் சர்களும் தங்களது அரசு பயங்கரவாதிகளை அழித்துவிட்டது என்றும், இதற்கு முன்பு இப்படியொரு தாக்குதலே நடந்ததில்லை என்றும் மார்தட்டினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக செவ்வாயன்று வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் முன்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஆஜரான வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், இதற்குமுன்பும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப் பட்டது உண்டு என்று ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக அவர் விபரங்களை முன்வைத்தபோது, கடந்த காலத்தில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதா, இல்லையா என்று நாடாளுமன்ற குழுவினர் குறிப்பான கேள்விகளை எழுப்பி னர். அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ‘தொழில்முறை ரீதியாக, இலக்கை முன்கூட்டியே தீர்மானித்து குறைந்த அளவிலான வீரர்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்று பயங்கரவாதிகளை அழிக்கும் தாக்குதல்கள் எல்லைத் தாண்டிசென்று கடந்த காலத்திலும் நடத்தப்பட் டுள்ளன; ஆனால் இந்த முறைத்தான் அரசாங்கம் முதன்முதலாக இத்தகைய தாக்கு தலை பொதுவெளியில் விவாதித்துள்ளது’ என்று ஒப்புக் கொண்டார்.மேலும், இதைத் தொடர்ந்து எதிர் காலத்தில் பாகிஸ்தானுடன் எத்தகைய மட்டத்தில், எத்தகைய அணுகுமுறை, எத்தகைய நிபந்தனையுடன் இருக்கும் என்பதற்கான திட்டம் எதுவும் இப்போது இல்லை எனவும் தெரிவித்தார்.
செப்டம்பர் 29 அன்று சர்ஜிக்கல் தாக்குதல் நடந்தவுடனே அதுபற்றி பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை பொது இயக்குநருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் ஜெய்சங்கர், நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையின்போது ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்பிபின் ரவத் உடனிருந்தார். எல்லைத் தாண்டி எத்தகைய தாக்குதல் நடத்தப் பட்டது என்ற விபரங்களை அவர் நாடாளு மன்றக் குழுவிடம் விவரித்தார்.முன்னதாக இந்த தாக்குதலுக்குப் பிறகு ராஜீய ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கும் ஜெய்சங்கர் பதிலளித்தார். இந்த விபரங்கள், நாடாளுமன்ற குழுவின் விசாரணையின் போது உடனிருந்த தகவல் ஆதாரங்களிடமிருந்து வெளியாகியிருப்பதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மை வெளிவந்துள்ள நிலையில், ஜெய்சங்கர் கூறியதை ஆய்வு செய்து வருவதாகவும் அந்த தகவல் வெளிவந்த விதம் குறித்தும் ஆய்வு செய்வதாகவும் கூறி மத்திய அரசு நழுவியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.