திரைப்படங்கள், மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதைப் பின்பற்றிக் கொலையை செய்துள்ளார் ஒரு கல்லூரி மாணவர்.
பாபநாசம் என்ற திரைப்படத்தில் ஹீரோவின் குடும்பத்தினர் எதிர்பாராதவிதமாக ஒரு கொலையைச் செய்துவிடுவர். அதை போலீஸாரிடம் இருந்து மறைப்பதற்காக... அந்த இடத்தில் எதுவும் நடக்காது போன்ற அமைப்புகளை உருவாக்கி, அதற்கான ஆதாரங்களையும் சேகரித்து வைத்திருப்பார் ஹீரோ. இதைப்போலவே அருண் சிவலிங்கப்பா படேல் என்ற கல்லூரி மாணவர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்ட தன் காதலியை கொலை செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் விஜய்பூரில் உள்ள காந்தி க்ரிஷி விக்யான் கேந்திரா என்ற விவசாயப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்து வந்தவர் அருண் சிவலிங்கப்பா படேல். இவர், தன்னுடன் படித்த அர்பிதா கிரிமல்லா பிரடா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். மூன்றாண்டுகளுடன் கல்லூரிப் படிப்பு முடிந்துவிட்டதால், அருண் பெங்களூருவுக்குச் சென்றுவிட்டார். அந்த சமயத்தில் அர்பிதா, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதோடு, திருமணம் செய்ய மறுத்தால்... தன் பெற்றோரிடம் சொல்வதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், அர்பிதா கடந்த வருடம் மே மாதம் கொலை செய்யப்பட்டார். இதுபற்றி விசாரிக்க துணை போலீஸ் கமிஷனர் மல்லிகார்ஜுன் பாலதந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 2015, ஜூன் மாதம் 3-ம் தேதி அந்த நிலத்தின் சொந்தக்காரர் ஜாஹிர் ஹுசைன், அர்பிதாவின் உடலைப் பார்த்துவிட்டு போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ‘கல்லூரிக்குச் சென்ற தன் மகளை காணவில்லை’ எனவும் புகார் அளித்திருந்தனர் அர்பிதாவின் பெற்றோர். ஒரு வருடத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த விசாரணையில், கடந்த 17-ம் தேதி ஹுபலி தர்வாத் போலீஸாரிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார், அருண்..

‘‘கொலை செய்த நாளன்று... அருண், தன்னுடைய அலைபேசியை கல்லூரி ஹாஸ்டலில் வைத்துவிட்டு, வகுப்பறையில் பொய்யாக வருகைப் பதிவேட்டில் (attendance) வருகையைப் பதிவுசெய்துள்ளார். அதன்பிறகு, அர்பிதாவை கப்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவர் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன் அங்கேயே ஓர் இடத்தில் புதைத்துவிட்டு பெங்களூருவுக்குத் திரும்பியுள்ளார். ‘த்ரிஷ்யா’ படத்தைப்போன்றே தனக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லாதவாறு தன்னைப் பாதுகாக்கப் பொய்யான ஆதாரங்களைச் சேகரித்து வைத்திருந்திருக்கிறார். பிறகு, அதைவைத்து ஒருவருடம் போலீஸாரிடமிருந்து தப்பித்திருக்கிறார். இறுதியில் தீவிர விசாரணையின்போது அவர் மாட்டிக்கொண்டார்’’ என போலீஸார் தெரிவித்தனர்.
திரைப்படங்கள் மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர, தவறான பாதையை பின்பற்ற வழிவகுக்கக் கூடாது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.