Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

கருணாநிதி கேள்விகளை எழுப்பி கொண்டுதான் இருப்பார்: பண்ருட்டி ராமச்சந்திரன்


தி.முக. தலைவர் கருணாநிதி, முதலமைச்சர் ஆகும் வரை கேள்விகளை எழுப்பிக் கொண்டுதான் இருப்பார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து இன்று விசாரித்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமசந்திரன், முதலமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த அவசியமில்லை என்று கூறிய அவர், வரும் 17 மற்றும் 18 தேதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருக்கும் என்றும், தீர்ப்பின்படி காவிரி  மேலாண்மை வாரியம் அமைப்பதே சரியான தீர்வாக இருக்குமெனவும் கூறினார்.

இலாகாக்கள் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைப்பது தொடர்பான ஆணையில் முதலமைச்சரின் கையெழுத்து குறித்து தி.முக. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளது தொடர்பாக பதிலளித்த பண்ருட்டி ராமசந்திரன், கருணாநிதி முதலமைச்சர் ஆகும் வரை இதுபோன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டுதான் இருப்பார் என்றார்.

மேலும், பசும்பொன் மக்கள் கழகத் தலைவர் இசக்கிமுத்து, அப்போலோ சென்று, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆமாங்க உண்மையாகவே உள்ளே போனேன். நான் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தளத்திற்கு நேராகவே சென்றேன். மற்ற தலைவர்கள் அந்தத் தளத்துக்குச் சென்றார்களா என்பது எனக்குத் தெரியாது. நான் அங்குச் சென்றேன். இரண்டாம் தளத்தின் லிப்ட் அருகேயே பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். முதல்வரின் இசட் பிரிவு பாதுகாப்புப் படை வீரர்கள் இருக்கிறார்கள். அங்கு இருக்கும் அறையில்தான் மூத்த அமைச்சர்களான ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களும், அரசு செயலர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்தேன். 'அம்மா நல்ல இம்ப்ரூவ்மென்ட்ல இருக்காங்க' என்றனர் அமைச்சர்கள். அவர்களின் முகத்தில் நம்பிக்கையைப் பார்த்தேன். மன வருத்தமான சூழல் எதுவும் அங்கு இல்லை. அந்தத் தளத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள் எதுவும் இல்லை. தரைத் தளத்தில் மருத்துவமனைக்கு வந்துள்ள பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர். அவர்களுக்குக் கெடுபிடிகள் எதுவும் இல்லை" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.