Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 4, 2016

பாகிஸ்தானுக்கும் காவிரிக்கும் என்ன தொடர்பு? - பதற வைக்கிறார் பா.ஜ.க செயலாளர்


காவிரி மேலாண்மை வாரியத்தை  அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என, சென்ற மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. அதற்குப் பதிலளித்த மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை, தற்போது அமைக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இருமாநில அமைச்சர்கள் கூட்டத்திலும் முடிவு எதுவும் எட்டப்படாததை அடுத்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்த பதில், கர்நாடக மாநில அரசு கூட்டிய கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கலந்துகொண்டது உள்ளிட்டவை  தமிழக விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க, கர்நாடக அரசுடன் பேசி காவிரி தொடர்பான முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழக பா.ஜ.க,  மத்திய அரசின் இந்த முடிவுக்கு என்ன எதிர்வினையாற்றுகிறது?

மத்திய அமைச்சர் ஒருவர் மாநில கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டது சரியா?  பா.ஜ.க-வின்  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளிக்கையில், "காவிரி மேலாண்மை வாரியத்தை, தற்காலிகமாக அமைக்க முடியாது என்றுதான் மத்திய அரசு கூறி இருக்கிறதே தவிர, நிரந்தரமாக அதற்கு மறுப்பு கூறவில்லை. மேலும், எல்லையில் பிரச்னை தற்போது அதிகரித்துவரும் சூழலில்தான், மத்திய அரசால் காவிரி நதிநீர் தொடர்பான விஷயத்தில் உடனடி முடிவை எட்டமுடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, மத்திய அரசு  வழக்கில் சேர்க்கப்படாததும் மற்றொரு காரணம். ஆனால் தமிழக பாஜக இதுதொடர்பாக, மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கும்" என்றார்.

பின்னர் விரிவாக பதிலளித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், "உச்ச நீதிமன்றத்தை விட மத்திய அரசு அமைக்கும் வாரியம் ஆற்றல் மிகுந்ததாக நிச்சயம் இருக்க முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே எதிர்க்கும் கர்நாடக அரசு, காவிரி நதிநீர் வாரியத்தின் சொல்லுக்கு மட்டும் கட்டுப்பட்டுவிடுமா?.இதனால்தான் மத்திய அரசு வாரியம் அமைப்பதில் தாமதம் காட்டிவருகிறது. மத்திய அரசு மீண்டும் கூட்டவிருக்கும் கூட்டத்தில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்தே நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும் சதானந்த கவுடா, கர்நாடகாவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டது கண்டிக்கத்தக்கதே, இது தொடர்பாக மத்திய அரசிடமும் தமிழக பாஜகவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளோம். எது நடந்தாலும் காவிரி நதிநீர் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்கிற தமிழக பாஜகவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது” என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.