முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்குள் போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி நுழைந்த மர்மநபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 28 நாட்களாக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்போலோ மருத்துவமனை போலீஸாரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக ஜெயலலிதா சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்தில் யாரும் அனுமதியின்றி செல்ல முடியாது. நீண்ட விசாரணைக்குப்பிறகே சிகிச்சைக்குரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் நோயாளிகளும், பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அப்போலோ மருத்துவமனைக்கு வெளியில் அ.தி.மு.க தொண்டர்கள் தவமாய் காத்திருக்கின்றனர். மேலும், பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்துள்ளனர். ஜெயலலிதாவை சந்திக்க அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்போலோ மருத்துவமனை வளாகம் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாகி விட்டது.
இந்தநிலையில் இன்று பிற்பகல், அப்போலோ நுழைவு வாயிலில் போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி, 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் மெயின் கேட்டைத் தாண்டி வேகமாக மருத்துவமனைக்குள் நுழைய முயன்றார். அந்த நபரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர் தன்னுடைய பெயர் உமேஸ்ரெட்டி என்று தெரிவித்தார். அப்போலோவில் சிகிச்சை பெற செல்வதாக தெரிவித்தார். ஆனால் அவரது கையில் அ.தி.மு.க துண்டு இருந்ததால் போலீஸாருக்கு உமேஸ்ரெட்டி மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது உமேஸ்ரெட்டி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாறி, மாறி பேசினார். இது போலீஸாருக்கு உமேஸ்ரெட்டி மீதுள்ள சந்தேகம் அதிகரித்தது. இதனால் அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "உமேஸ்ரெட்டி, சிகிச்சை பெற செல்வதாக பாதுகாப்பில் நின்ற போலீஸாரிடம் கூறி விட்டு உள்ளே நுழைந்துள்ளார். அவரது கையில் அ.தி.மு.க துண்டு இருந்ததைப் பார்த்தவுடன் அவரிடம் விசாரித்தோம். முதற்கட்ட விசாரணையில் அவர் தனியார் கம்பெனியில் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. முழு விசாரணைக்குப்பிறகே அவர் எதற்காக அப்போலோவுக்கு சென்றார் என்ற விவரம் தெரியவரும்" என்றார்.
அப்போலோவுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்த உமேஸ்ரெட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர், ஜெயலலிதாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளே சென்றாரா என்ற கோணத்திலும் விசாரணையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டதுடன், போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸாரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.