Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 21, 2016

'நான்கு நாட்கள் ஆகிவிட்டது, என் மகன் எங்கே' : கதறும் ஜெ.என்.யூ மாணவரின் தாய்


டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜிப் அகமது கடந்த சனிக்கிழமை திடீரென மாயமானார். நஜிப் அகமதின் தாய் பல்கலை., வளாகத்தில் அழுதபடி காத்துக் கொண்டிருக்கிறார். ’என் மகனை நான்கு நாட்களாக காணவில்லை. அவனை தாக்கியவர்கள்  சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். என் மகன் எங்கே’ என  திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

இந்நிலையில் விடுதியில் தங்கிப் படித்து வந்த நஜீப்பை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நேற்று நள்ளிரவு முதல் ஜெ.என்.யூ மாணவர்கள் சுமார் 200 பேர் பல்கலைக்கழக வளாகத்தில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மாணவர்களின் திடீர் போராட்டத்தை அறிந்து  ஜெ.என்.யூ வளாகத்தில் போலீஸாரும், பல்வேறு மாணவ அமைப்பினரும் குவியத் தொடங்கியதால் பதற்றம் நிலவி வருகிறது.

ஜெ.என்.யூ விடுதியில் பல்வேறு அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான  நஜிப் அகமதை கண்டுப்பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவர்கள் தரப்பில் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.