Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 22, 2016

கார்ப்பரேட் கம்பெனி டூ ஆட்டோ டிரைவர்- இது மும்பை மாணிக்கம்


மும்பையைச் சேர்ந்த கார்ப்பரேட் பணியாளர் ஒருவர் தான் ஒரு ஆட்டோ டிரைவர் ஆக வேண்டும் என்பதற்காக தனது கார்ப்பரேட் பணியை விட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "நான் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். தினசரி காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஒரே வேலையை செய்வது எனக்கு சலிப்பு தட்டியது. மேலும், மிகவும் இயந்திரத் தன்மையாக தெரிந்தது.


எனவே, ஒரு நாள் அந்த வேலையை விட்டேன். ஒரு ஆட்டோ வாங்கினேன். தினசரி பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறேன். இதன்மூலம் பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. இதில் பணி நேரம் அதிகம்தான். ஆனால் எனக்கு இது பிடித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் திருப்தியாக உணர்கிறேன். இதன் பிறகு எனது எம்.எஸ்.சி படிப்பையும்முடித்தேன். எனக்கு ஃபோட்டோ கிராஃபி மீதும் ஆர்வம் அதிகம்.

எனது பயணிகளை படம் எடுப்பேன். ஃபோட்டோ ஃகிராஃபிக்காக உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆங்கிலப்புலமையும் உள்ளது. 40 வருடம் ஆகிவிட்டது. உலகின் பெரிய, பெரிய பணக்காரர்களை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்". என்றார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.