பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பிள்ளை இறந்துவிட்டால், அந்தத் தாயின் வேதனை எப்படி இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வருடங்கள் ஆகும். ஆனால், அமெரிக்காவின் நியூ யார்க் நகரைச் சேர்ந்த வெண்டி க்ரூஸ் சான் என்ற பெண், தான் பெற்ற குழந்தை இறந்துவிட்டதால் தனது தாய்ப்பாலை மற்ற குழந்தைகளுக்குத் தந்து உதவி, தாயின் பேரன்பைப் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் வெண்டி க்ரூஸ் சான், மருத்துவமனையில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், அந்தக் குழந்தை எதிர்பாராதவிதமாக பிறந்த உடனே இறந்துவிட்டது. தன் குழந்தை இறந்த சோகத்திலிருந்து மீண்டு, மூன்று நாட்களிலேயே சாதாரண நிலமைக்குத் திரும்பி, தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் குழந்தைகளுக்குத் தனது பாலைத் தந்து உதவத் தீர்மானித்தார்.
உடனே, தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் குழந்தைகளை மருத்துவமனை மூலம் தெரிந்துக்கொண்டு, தனது பாலை கவர்களில் பம்ப் செய்து நிரப்பி, அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். இப்படி மூன்று மாதங்களில் ஆறு குழந்தைகளுக்கு உதவிவந்த வெண்டி, இதுவரை 59 லிட்டர் பால் கொடுத்து உதவியிருக்கிறார். சில நேரங்களில், மூன்று அல்லது நான்கு மணிநேரம் குழந்தைகளுக்கு பால் தேவைப்படும். அப்போது, மிகுந்த சிரமத்துக்குள்ளானேன் என்று கூறியுள்ளார்.
இந்தச் செய்தியைத் தனது ஃபேஸ்புக் வலைதளத்தில் போட்டோவுடன் தெரிவித்துள்ளார். வெண்டி க்ரூஸ் சானின் நல்ல உள்ளத்தைக் கண்டு நெட்டிசன்கள் வெண்டியை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனப் புகழ்ந்து வருகிறார்கள். தான் மறுபடியும் கர்ப்பம் ஆகவேண்டும் என விருப்புவதாகவும், அதனால் தற்போது பால் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தாயன்பின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிய வெண்டியை நாமும் பாராட்டுவோம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.