இந்திய பந்துவீச்சளார் முகமது ஷமிக்கு 14 மாத பெண் குழந்தை உண்டு. நியூசிலாந்து அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது 2-வது நாள் ஆட்டம் நடந்து கொண்டிருந்தபோது, முகமது ஷமியின் மகள் ஆயிரா கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதிகப்படியான காய்ச்சல் காரணமாக குழந்தையை ஐ.சி.யூ.வில் சேர்த்துள்ளனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் 3 நாட்களாக குழந்தை இருந்துள்ளது.
இந்த தகவல் களத்தில் இருந்த முகமது ஷமிக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கவலையடைந்தார். ஆனால், அந்த சமயத்தில் விராட்கோலியும் சக வீரர்களும் 'குழந்தை விரைவில் குணமடைந்து விடுவாள். என ஆறுதல் அளித்துள்ளனர். இதையடுத்து சகஜ நிலைக்குத் திரும்பிய முகமது ஷமி பந்துவீச்சில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்த பின்னர் கொல்கத்தாவில் மகள் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு முகமது ஷமி சென்று பார்த்தார். அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் ஆட்டம் முடிந்ததும் மருத்துவமனைக்கு சென்று மகளுடன் இருந்துவிட்டு இரவில் தாமதமாகத்தான் முகமது ஷமி அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார். கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த வெற்றியை பெற முகமது ஷமியும் ஒரு காரணம். இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில், 'ஆயிரா ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டதும் பரபரப்படைந்தேன். ஆனால், சக வீரர்கள் தந்த ஆறுதலால் தொடர்ந்து களத்தில் பணியாற்ற முடிந்தது'' என்றார்.
கொல்கத்தா முகமது ஷமியின் சொந்த ஊர். கடந்த திங்கட்கிழமை ஆயிரா காய்ச்சல் குணமடைந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.