Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்தவுடன் டைவர்ஸ்


துபாயில் புதிதாக திருமணமான நபர், தன் மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அடையாளம் தெரியவில்லை என விவாகரத்து செய்துள்ளார்.


கடற்கரைக்கு தன் மனைவியுடன்  சென்ற அந்த நபர், நீச்சலடித்துவிட்டு வந்த அவரின் மனைவியின் உண்மையான முகத்தை பார்த்து அடையாளம் தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம். அளவுக்கதிமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.


இந்த சம்பவத்தில் மனமுடைந்தப் பெண், உளவியல் நிபுணர் டாக்டர் அப்துல் அஜிசிடம் உதவிக் கோரியுள்ளார். அந்த உளவியல் நிபுணர் ஊடகங்களில் அளித்த பேட்டியில், “அந்த பெண் திருமணத்திற்கு முன்னர்  பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார். மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இனி அவர்கள் சேர்வது கடினம்” இவ்வாறு கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.