Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

லண்டன் விரைந்தார் டாக்டர் ரிச்சர்ட்! அப்போலோ அப்டேட்ஸ்


முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலாே மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த மாதம் 30-ம் தேதி லண்டன் டாக்டர் ரிச்சர்டு, அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவர், முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளித்தார். பின்னர் லண்டன் சென்ற டாக்டர் ரிச்சர்டு, மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளித்தார். இதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும், முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில், முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் டாக்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள், டாக்டர் ரிச்சர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் சிங்கப்பூர் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 14-ம் தேதியில் இருந்து முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ரிச்சர்டு இன்று லண்டன் புறப்பட்டு சென்றார். எய்ம்ஸ் மருத்துவர்களும் டெல்லி சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.