எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுவரை அவர், அங்கு சிகிச்சையில் இருக்கிறார். ஆனால், அவருடைய உடலுக்கு என்ன பாதிப்பு, அவருடைய சிகிச்சை எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி முறையான தகவல்கள் இதுவரை இல்லை. மேலும், அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட யாரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்றும் தகவல்கள் பரவுகின்றன.
இந்தநிலையில், அரசாங்கமும் அதுபற்றி எந்த முறையான அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியாக இருக்கிறது. இதுவரை, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளிவந்த அறிக்கைகள் எல்லாம் அப்போலோ மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்டவையே. இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதில், "எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பணியாற்றும் செயல்திறனோடு உள்ளாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளில், ஜெயலலிதா செயல்படும் நிலையில் இல்லை என்று தெரியவந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.