Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

அப்போலோவுக்கு படையெடுக்கும் அகில இந்திய தலைவர்கள்! - இன்று... அமித் ஷா, அருண் ஜெட்லி!


சென்னை கிரிம்ஸ்  சாலை அப்போலோ மருத்துவமனையின் வளாகத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. பாதுகாப்பு  கெடுபிடிகளை கொஞ்சம் தளர்த்தி இருந்தாலும், சைரன் வைத்த வாகனங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வருவதும், அமைச்சர்கள் அடுத்தடுத்து விஜயம் செய்வது என வி.ஐ.பிக்களின் விசிட்டிங் இடமாக இப்போது மாறிவிட்டது அப்போலோ.

அப்போலோவில் ஜெயலிலதா அனுமதிக்கபட்டு இருபது நாட்களை தொட்டு விட்டது.  அமைச்சர்களே முதல்வரை பார்க்க முடியாத அளவிற்க கெடுபிடிகள் இருந்து வந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர்  தொல்.திருமாவளவன், அப்போலோவிற்கு விசிட் அடித்து முதல்வர் உடல்நிலை குறித்துகேட்டறிந்து வந்தார். அவர் அப்போலோவிற்கு போய் வந்தபின், சீமான், வைகோ, என தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும் அப்போலோவிற்குள் தலைகாட்டி வந்தனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அப்போலோவிற்கு வந்து சென்றார்.ஆனால் யாரும் எதிர்பாராத வகையில்  டெல்லியில் இருந்து ராகுல் காந்தி திடீர் என அப்போலோவிற்கு விசிட் அடித்து, அகில இந்திய அளவில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தினார். தி.மு.க வின் கூட்டணயில் இருந்து கொண்டே  அ.தி.மு.க  தலைவரை பார்க்கச் சென்ற  ராகுலின் அரசியல் தந்திரத்தால், கொஞ்சம் ஆடிப்போய்விட்டது, பா.ஜ.க.

ராகுல் வந்தவுடன் பிரதமர் மோடி அப்போலோ வருகை தர உள்ளார் என்ற செய்தி இறக்கை கட்டியது. ஆனால் அதை பா.ஜ. கட்சி  மேலிடம் உறுதி செய்யாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து,  அகில இந்திய தலைவர்கள் வருகை அதிகரித்துவிட்டது. அ.தி.மு.க இந்திய அளவில் இப்போது மூன்றாவது பெரிய கட்சி எந்த அந்தஸ்தை பெற்றுள்ளது. அதே போல் ஐந்து மொழிகளை சரளமாக பேசும் ஜெயலலிதாவ்வுக்கு வட இந்திய தலைவர்களும் நெருக்கம் அதிகம். அகில இந்திய அளவில் முக்கிய தலைவராக ஜெயலலிதா கருதப்படுவதால், அவர் உடல்நிலை சரியின்றி மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவரை சந்திக்க  அகில இந்திய அளவில் உள்ள தலைவர்களும் வர விரும்புகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஆளுநர் சதாசிவமும் வருகை தந்து முதல்வர் உடல்நிலையை விசாரித்துச் சென்றனர்.

நேற்று காஷ்மீர் மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் சௌதாரி சுல்ஃபிகர் அலி வருகை தந்து. முதல்வர் உடல்நிலையை விசாரித்தார். மாலை ஒடிசா முதல்வர் சார்பில் அந்த மாநில கல்வி அமைச்சர் டேபி பிராசாத் மிஸ்ரா வருகை தந்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வருகை தர இருந்த நிலையில் அவர் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று திருப்பதி கோவிலில்  சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அந்த பிரசாதங்களை சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த சேகர் ரெட்டி என்பவர்  மூலம் அப்போலோவிற்கு கொடுத்து அனுப்பினார்.

திருப்பதி லட்டு, சுவாமிக்கு சாத்திய அங்கவஸ்திரம் ஆகிய பொருட்களுடன் சேகர் ரெட்டி அப்போலோவுக்குள் சென்றார்.இன்று பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் அமித்ஷா அப்போலோவுக்கு வருகை தர உள்ளார். அகில இந்திய தலைவர்கள் படையெடுப்பால், அப்போலோ மருத்துவமனை வளாகமே பரபரப்புடன் உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.