காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகரின் குடிநீர்த் தேவை, மண்டியா மற்றும் தமிழகத்தின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் சேர்த்து 34.13 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரினை அடுத்த 3 நாட்களுக்குத் திறக்க கர்நாடக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பினை கர்நாடக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா வெளியிட்டார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதா என்பது தொடர்பான அறிக்கையினை நாளை மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளநிலையில் கர்நாடக அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.