நாட்டுக்காக வீர மரணம் அடைந்தால் எந்த காரணத்தைக் கொண்டும் அழக் கூடாது என மகன் வாங்கிக் கொண்ட சத்தியத்தை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை குர்ணாம் சிங்கின் தாய் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தவில்லை.
உரி தாக்குதலையடுத்து இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. இதனால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கடந்த 21ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குர்ணாம் சிங் என்ற 26 வயது எல்லை பாதுகாப்புப் படை வீரர் படுகாயம் அடைந்தார். ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குர்ணாம் சிங், நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பலேசால் மகவோலி என்ற கிராமம்தான் குர்னாம் சிங்கின் சொந்த ஊர். வீர மரணம் அடைந்த அவரது உடல் நேற்று சொந்த கிராமத்துக் கொண்டு வரப்பட்டது. கிராமத்தில் குர்ணாம் சிங்கின் உறவினர்கள், நண்பர்கள் அவரது உடலைப் பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால், குர்ணாம்சிங்கின் தாயார் ஜஸ்கவந்த் கவுரின் கண்களில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. இதனைப் பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வியந்து போனார்கள். செய்தியாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர். 'அம்மா... உங்கள் மகன் இறந்திருக்கிறார் நீங்கள் அழுது நாங்கள் பார்க்கவில்லையே ' என அவரிடம் கேட்டுள்ளனர்.
அப்போதுதான் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு செய்தியாளர்களிடம் ஜஸ்கவுந் கவுர் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். 'ராணுவத்தில் சேர்ந்த போதே என் மகன் என்னிடம் தான் நாட்டுக்காக இறந்து விட்டால் அழக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டான். அதனால்தான் எனது அழுகையை அடக்கிக் கொண்டேன். இனியும் அழ மாட்டேன். என் மகன் எங்களை பெருமைப்படுத்தியுள்ளான். அவனை எண்ணி நாங்கள் பெருமைப்படுகிறோம் ''என்றபோது சுற்றியிருந்தவர்கள் கண்கள் மேலும் குளமாகின.
குர்னாம் சிங்கின் தந்தை குல்பீர் சிங் ‘‘எங்கள் மகன் வீரம் செரிந்தவன். அவனது உயிர்தியாகத்துக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் பாதுகாப்பு படைவீரர்களுக்காக ஒரு ஆஸ்பத்திரியை நிறுவ வேண்டும் என்பதே எனது ஆசை. மத்திய அரசிடம் இதனை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். தாக்குதலில் காயம் அடையும் இந்த நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரனையும் காப்பற்ற அந்த மருத்துவமனை உதவியாக இருக்கும். மோடி அரசு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவேண்டும்.'' என்றார்.
குர்ணாம் சிங் கொல்லப்பட்ட தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக பயங்கரவாதிகள் சிலர் நமது எல்லைக்குள் புக முயற்சித்துள்ளனர். ஊடுறுவலைத் தடுக்க குர்ணாம் சிங் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், பயங்கரவாதிகள் தப்பி ஓடியுள்ளனர். அடுத்த நாள் பாகிஸ்தான் ராணுவம் குர்ணாம்சிங்கை குறிவைத்துத் தாக்குதல் நடத்திக் கொன்றுள்ளது. இது குறித்து எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குனர் ஜெனரல் அருண் குமார் கூறுகையில்,''உயரிய அசோக் சக்கரா விருது அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது. குர்ணாம் சிங்கின் வீரத்தால், எல்லை பாதுப்பாப்புப் படை வீரர்களே பெருமைப்படுகிறோம். அவருக்கு அசோக் சக்கரா விருது வழங்க பரிந்துரைத்திருக்கிறோம்'' என்றார்.
குர்ணாம் சிங் போன்ற எல்லைச் சாமிகளும் ஜஸ்கவுந்த் கவுர் போன்றத் வீரத் தாய்களும்தான் இந்த தேசத்தின் மிகப் பெரிய பலம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.