Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 18, 2016

ஈஷா முறைகேடுகளை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் சிவா பொய் வழக்கில் சிறையிலடைப்பு...!


ஈஷா யோகா மையத்திற்கு அருகேயுள்ள முட்டத்துவயல் பகுதியில் ஈஷா யோகா மையத்தின் சார்பாக புதிதாக பல ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவா கூறுகையில்,

நகர ஊரமைப்புத் துறை, மலைதளபாதுகாப்புக் குழுமம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவற்றின் அனுமதி இன்றியும், தடை உத்தரவுகளை மீறியும் நஞ்சை நிலங்களில் ஈஷவாவின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் உதவியுடன் பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும், ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை போலி ஆவணங்கள் மற்றும் பினாமிகள் மூலமாக ஈஷா மையம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது.

அண்மையில் கட்டுமான பணிகள் நடக்கும் பகுதிக்கு அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் வனவிலங்குகளும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

கட்டுமான பணிகளை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈஷாவிடம் இருந்து ஆதிவாசி மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு  திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து கோவை மண்டல நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குனர்  செல்வராஜ் கூறுகையில், ஈஷா யோக மையம் புதிய கட்டுமான பணி தொடர்பாக எந்த ஒரு அனுமதியும் வாங்கவில்லை. அனுமதி இல்லாமல் நன்செய் நிலத்தில் கட்டுமான பணி தொடர்ந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பண பலமும் அதிகார பலமும் கொண்ட ஈஷா மையத்துடன் மோதினால் என்ன நடக்கும்? எந்த ஆதிவாசிகளுக்காக, அந்த  மக்களின் உரிமைகளுக்காக சிவா போராடினாரோ அந்த ஆதிவாசி பெண் ஒருவரை வைத்து தன்னுடைய நிலத்துக்கு பட்டா வாங்கித்தருவதாக ரூபாய்.4000 வாங்கிக்கொண்டு சிவா ஏமாற்றிவிட்டார் என்று புகார்  கொடுக்க  வைத்து வழக்கு பதிந்துள்ளனர். அந்த பெண் ஈஷா மையத்தில் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது. புகார் பதிந்தவுடன் சிவாவை சிறையிலும் அடைத்துவிட்டனர். 4000 ரூபாய் ஏமாற்றுபவர் தான் தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து ஈஷா மையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினாரா? வனப்பகுதிக்குள் இத்தனை கட்டிடங்கள் கட்ட எப்படி அனுமதி  கொடுக்கப்பட்டது என்று அங்கு யோகா கற்றுக்கொள்ள  செல்லும் சுயநலவாதிகளுக்கு தோன்றாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சிவா மீது பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்: Section 294(b) (punishment for sings, recites or utters any obscene song, ballad or words in or near any public place), 323 (voluntarily causing hurt), 420 (cheating and dishonestly inducing delivery of property) and Protection of Civil Rights (PCR) Act

உங்களிடன் கேட்பது ஒன்றே ஒன்று தான். இந்த பதிவை Share செய்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். சமூகபணி செய்யும் ஒரு சிலரையும் நாம் இவ்வாறு பறிகொடுத்துவிட்டால் நமக்காக நமது உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக நாளை ஒருவர் கூட மீதம் இருக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.