அமெரிக்காவில், டிஸ்கவரி எஜுகேஷன் எனும் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் இளம் விஞ்ஞானிகளைக் கண்டெடுப்பதற்காக பள்ளி மாணவர்களுடைக்கு இடையேயான நேஷனல் பிரிமியர் அறிவியல் போட்டியை (Nation’s premier science competition ) நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு போட்டியிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் முதலிடத்தைப் பிடித்து 2016 ஆண்டிற்கான 'டாப் யங் சைன்டிஸ்ட்' என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த 13 வயது மானசா மெண்டு (Maanasa Mendu).

5 முதல் 8-ம் கிரேடு வரை படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி சுற்றுக்கு பத்துப் பேர் தேர்வானார்கள். இதில் ஐந்து பேர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மினசோட்டாவில் நடைப் பெற்ற இறுதிப் போட்டியில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனத்தை கண்டுபிடித்தற்காக மானசா முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு 25 ஆயிரம் டாலர்கள் பரிசு கிடைத்தது. ஓஹியோ மாகாணத்தில், மேசன் நடுநிலைப் பள்ளியில் (Mason Middle School) 8-ம் கிரேடு படித்துவரும் மாணவி
இந்தச் சாதனத்தை கண்டுபிடிக்க என்ன காரணம் என்று நடுவர்கள் கேட்டதற்கு, ''ஒருதடவை இந்தியாவிற்கு சென்றேன் அங்கு பல ஊர்களில் சுத்தமான குடிநீர் குறிப்பாக மின்சாரம் என அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்காக ஒரு தீர்வாக என்ன செய்யலாம் என்ற யோசனையில் வந்ததுதான் இந்த ஐடியா' என்றார் மானசா.
பரிசாக கிடைத்த பணத்தை, அடுத்தக் கட்ட புதிய பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப் போகிறேன் என்று சொல்லும் மானசா, தன்னோடு இறுதி சுற்றில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில், ''இது முதல் படிதான். நாம் கடக்கவேண்ட தூரம் இன்னும் ஆயிரக்கணக்கான மைல் இருக்கிறது. கண்டுபிடிப்புகளை நேசியுங்கள் அடுத்த முறை நிச்சயம் உங்களில் ஒருவர் 'டாப் யங் சைன்டிஸ்ட்' ஆகமுடியும்'' எனச் சொன்னதும் அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. அமெரிக்க விருதை இந்தியர்கள் பெற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் மானசாவும் இணைந்தார்.
தன் கண்டுபிடிப்பு பற்றி மானசாவின் வீடியோ...
இந்தியாவை மனதில் ஏந்திநிற்கு இளம் விஞ்ஞானி மானசாவுக்கு வாழ்த்துகளைப் பகிர்வோம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.