Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 29, 2016

அன்னைக்கு மரியாதை செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்


இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 2-2 என்ற நிலையில் தொடர் சமநிலையில் இருப்பதால், இன்றைய போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 14 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து இருக்கிறது. ரோஹித் ஷர்மா 35 ரன்களுடனும், கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

இன்றைய போட்டியில், இந்திய வீரர்கள் அனைவரும் ஜெர்சியில், அவர்களது பெயருக்கு பதிலாக அவர்களது தாயாரின் பெயரை பதித்து இருக்கிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த தோனி, " எல்லாவற்றிலும், தந்தையின் பெயருக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறோம்.தாயார்கள் நமக்கு செய்ததற்கும், நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியர்கள் அனைவரும் இதை மனதில் வைத்து, அவர்களை தினமும் பாராட்ட வேண்டும்" என்றார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.