Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 6, 2016

பாகிஸ்தான் மீதான தாக்குதல் வீடியோவை வெளியிடப்போகிறது இந்தியா ! #SurgicalAttack


இந்திய இராணுவம் கடந்த மாதம் 29-ம் தேதி,  எல்லைப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முன்னேறிச் சென்று தாக்கியது. ஏற்கனவே திட்டமிட்டு, அந்தப் பகுதியைக் கண்காணித்து வந்ததால், ஏழு தீவிரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இதில் தீவிரவாதிகளும், அவர்களுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். இது கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரி பகுதியில் நடத்திய தாக்குதலுக்கான பதிலடி என்று இந்தியா தெரிவித்தது. இதனால், இந்திய இராணுவத்துக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில், அதுபோன்றதொரு எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், அதனால் தங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கூறி இருந்தார். ஒரு கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், "இந்தியா நடத்தும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானும் தயாராக இருக்கிறது. எங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம். அத்துமீறி எங்கள் எல்லைக்கு வந்து இரண்டு வீரர்களை சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.  இரண்டு நாட்களுக்குப் பின்னர், அப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை என்றும், இந்திய இராணுவம் பொய்யான தகவல்களை பரப்புகிறது என்றும்  பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்தது. அதோடு சர்வதேச பத்திரிகையாளர்களையும் அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இடத்தையும்  பாகிஸ்தான் ராணுவம் காட்டியது. இதனால் இந்தியா தாக்குதல் நடத்தியதா ?இல்லையா ?என்ற கேள்வி சர்வதேச அரங்கில் விவாதப் பொருளானது.



இந்தியாவில் ஆத் ஆத்மி உட்பட பல முக்கிய கட்சிகள், "தாக்குதல் நடத்தியது உண்மை என்றால் வீடியோ காட்சிகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்?" என்று கேள்வி எழுப்பி உள்ளன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "தேவைப்பட்டால் அந்த வீடியோக்கள் வெளியிடப்பப்படும்" என்று சொல்லி இருந்தார்.

இந்தநிலையில், இந்திய இராணுவம் தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. தாக்குதலின் போது விமானங்கள் மூலமும், நேரடியாகவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்தநேரத்திலும் போர் மூளலாம் என்ற சூழலில், இந்த வீடியோக்களை வெளியிடுவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தாலும், இந்த வீடியோக்களை வெளியிட்டு ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய இராணுவம் உள்ளது. வீடியோ காட்சிகளை வெளியிடுவது தொடர்பான கோப்புகள், தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. பிரதமரின் ஒப்புதல் கிடைத்ததும் வீடியோக்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறது இந்திய இராணுவம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.