தர்மசாலாவில் இன்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியை ஊதித்தள்ளியது இந்தியா. நியூசிலாந்து நிர்ணயித்த 190 ரன்களை எளிதாக விரட்டிப்பிடித்தது.
இன்றைய போட்டியில் நடந்த ஐந்து முக்கியமான விஷயங்கள் இங்கே!
1. 900 வது ஒருதின போட்டியில் ஆடுகிறது இந்தியா. இந்த மேட்சில் இந்தியா சார்பாக முதல் முறையாக சர்வதேச ஒருதின போட்டி விளையாடும் வாய்ப்பு பெற்றார் ஹர்திக் பாண்டியா. குப்தில், கோரே ஆண்டர்சன், ரோஞ்சி என மூன்று அதிரடி பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பி் ஹர்திக் முதல் ஒருநாள் போட்டியிலேயே கவனிக்க வைத்திருக்கிறார்.
2. கேன் வில்லயம்சனின் மோசமான ஃபார்ம் ஒருதின தொடரிலும் தொடர்கிறது. டெஸ்ட் தொடரில் ஆடிய இரண்டு போட்டியலும் அஷ்வினின் பந்துக்கு விடை தெரியாமல் வீழ்ந்தார். இதையடுத்து உமேஷ் யாதவின் பந்து வீச்சில் இன்று சரிந்தால் வில்லியம்சன். நியூசி கேப்டனின் இந்த மோசமான ஆட்டம் அந்த அணியின் கூடாரத்தை கவலைப்பட வைத்திருக்கிறது.

3. 18.4 ஓவரில் வெறும் 65/7 என தடுமாறியது நியூசிலாந்து. ஆனால் டாம் லாதம் அற்புதமான ஒரு இன்னிங்க்ஸ் ஆடினார். காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விலகியிருந்த பந்து வீச்சாளர் சவுத்தீ இன்றைய போட்டியில் களமிறங்கினார். இந்திய பவுலர்களுக்கு கடும் தலைவலியாக அமைந்தது சவுத்தி. அதிரடியாக ஆடிய அவர் 45 பந்தில் 55 ரன் எடுத்தார்.ஒன்பதாவது விக்கெட்டுக்கு லாதம் - சவுத்தீ இணை 71 ரன்களை சேர்த்தது. லாதம் 98 பந்தில் 79 ரன் அடித்து நாட் அவுட்டாக இருந்தார்.
4. ரோகித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார் ரஹானே. வழக்கத்துக்கு மாறாக ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடினார் ரஹானே. பிரேஸ்வெல்லின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் ரஹானே. ரோகித் 14 ரன்னும், ரஹானே 33 ரன்னும் எடுத்தனர்.
5. சேஸிங் என்றாலே வெறி பிடித்து ஆடும் கோஹ்லி இந்த போட்டியிலும் தனது பணியை செவ்வனே செய்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் கொளுத்தி எடுத்தார். கோஹ்லி. கிடைக்கிற கேப்பில் எல்லாம் பவுண்டரியாக விளாசித்தள்ளினார். தோனியை ரன் அவுட்டாக்கி விட்டாலும் இறுதி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார் கோஹ்லி. 81 பந்தில் 85 ரன்கள் கோஹ்லி விளாசியதில் 33.1 ஓவரிலேயே 194 ரன்கள் அடித்து மேட்ச்சை முடித்தது இந்தியா.
வாழ்த்துகள் டீம் இண்டியா!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.