அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கிவிட்டது. கடந்த மாதம் 22-ம் தேதி 'சாதாரணக் காய்ச்சல்' என்று சொல்லியே அனுமதிக்கப்பட்டதால், 'விரைவில் வீடு திரும்பிவிடுவார்' என்ற நம்பிக்கையில் இருந்தனர் தொண்டர்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது கட்சிக்காரர்கள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியது. அதன்பிறகுதான் 'மருத்துவர்களை நம்பியது போதும்; இனி ஆண்டவனைத்தான் நம்பவேண்டும்' என்ற முடிவுக்கு வந்த அ.தி.மு.க-வினர் தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்த ஆரம்பித்தனர். 'முதல்வர் விரைவில் குணமடையவேண்டும்' என்பதே அவர்களது பிரார்த்தனையாக இருந்து வருகிறது!
பெரும்பாலான அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கில் பால்குடங்கள் எடுத்தும் வருகின்றனர். இதன் உச்சமாக அமைச்சர் உதயகுமார்கோயிலிலேயே மூன்று நாட்கள் தங்கி விரதம் இருந்து பால்குடம் எடுத்தார். இதுதவிர கிறிஸ்துவ தேவாலயம், தர்ஹாக்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
சமீப நாட்களில், அப்போலோ மருத்துவமனை வாசலிலேயே தினமும் தடபுடலாக பூஜைகளை செய்து வருகிறார்கள் அம்மாவின் அதி தீவிர பக்தர்கள். இந்த வரிசையில், நவராத்திரியினை முன்னிட்டு ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான பூஜைகள் நடத்தி மருத்துவமனை வாயிலையே ஆலயமாக மாற்றிவிட்டனர்.
இதற்கிடையில், மாவட்டம் தோறும் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் 'முக்கியக் கோயில்களில், முதல்வர் பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்து, பிரசாதத்தை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு' அ.தி.மு.க. மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் அ.தி.மு.க-வினர் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
கட்சியினரிடம் இருக்கும் இந்தப் பக்தி போயஸ்கார்டனில் இருக்கும் சசிகலாவுக்கும், இளவரசிக்கும் இல்லாமல் போய்விடுமா? சாதாரண நாட்களிலேயே ஜெயலலிதாவுக்கு ஆரோக்கியம் வேண்டி கோயில் கோயிலாக ஏறி இறங்கிவரும் சசிகலா, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 'முதல்வர் பூரண குணமடைய வேண்டி' பல்வேறு கோவில்களிலும் நேர்ச்சை செலுத்த வேண்டிக் கொண்டுள்ளார். மேலும், கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுக்கு ஆட்களை அனுப்பி சிறப்பு வழிபாடுகளை நடத்தச் சொல்லியுள்ளார். இதன் ஒரு பகுதியாக அமாவாசை தினத்தன்று பாம்பன் சுவாமிகள் தரிசனமும் நடைபெற்றது. திருப்பதி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அங்கிருந்து பிரசாதங்களும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தன.
இந்த நிலையில் 18-ம் தேதி காலை சசிகலாவின் அண்ணி இளவரசி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்தார். இந்தக் கோயில் ஜெயலலிதாவுக்கு இஷ்டமான கோயிலாகும். இங்கு வந்த இளவரசி, பார்த்தசாரதி பெருமாளுக்கு ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்தார். சுமார் பத்து நிமிடங்கள் பெருமாள் சன்னதி முன் நின்று, கண்களை மூடி மனமுருக பிரார்த்தனை செய்தார். பின்னர் நரசிம்மர் சன்னதி வந்து அர்ச்சனை செய்து வேண்டிய இளவரசியின் கண்களில் கண்ணீர் கசிந்திருந்தது. அப்போது கோயிலில் நின்றுகொண்டிருந்த யாருடனும் அவர் பேசவில்லை. தரிசனம் முடிந்து அப்போலோவுக்கு கிளம்பிய இளவரசி மறக்காமல், கோயில் பிரசாதத்தையும் கையில் எடுத்துக்கொண்டார்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.