சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு, முதல் திருமணம் தோல்வி... இரண்டும் சேர்ந்து வதைக்க, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கெள்ள நினைத்ததாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், தன் சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
பிராட் ஹாக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்துவீச்சாளர். 1996-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன இவரால், ஷேன் வார்ன் புகழ் வெளிச்சத்துக்கு முன் பிரகாசிக்க முடியவில்லை. ஆனாலும், 2003 மற்றும் 2007 ல் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். 2008-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன்பின் வர்ணனையாளர் அவதாரம் எடுத்த ஹாக், திடீரென மீண்டும் கிரிக்கெட் அரங்கில் புகுந்து, உலகெங்கும் நடக்கும் டி-20 தொடர்களில் விக்கெட் வேட்டை நிகழ்த்தினார். கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பங்கேற்றதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய வயதான வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, 45-வது வயதில் பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.
சமீபத்தில் அவர், The Wrong ‘Un' என்ற சுயசரிதை புத்தகம் எழுதினார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால், விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
''கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்த பின், மண வாழ்வும் தோல்வியடைந்ததால் மன அழுத்தத்தில் இருந்தேன். நிறைய மது அருந்தினேன். ஒருநாள் போர்ட் பீச் பகுதியில் காரை நிறுத்தி விட்டு இருட்டில் நடந்து சென்றேன். கடலை வெறித்துப் பார்த்து ஒரு முடிவு எடுத்தேன். கடல் தடுப்பு அரிப்பான் கற்கள் வரை நீந்திச் செல்ல வேண்டும். திரும்பி வந்தால் ஓகே. இல்லையென்றாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தேன். முடிவை விதி வசம் ஒப்படைத்து விட்டு நான்கு முறை நீந்திச் சென்றேன். ஒவ்வொரு முறையும் அந்த முயற்சி கடினமாக இருப்பதை உணர்ந்தேன். அப்போதுதான் நினைப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருப்பது புரிந்தது. அதிர்ஷ்டவசமாக, பிழைத்து விட்டேன்’’ என்று அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பிராட் ஹாக், ஆஸ்திரேலிய அணிக்காக ஏழு டெஸ்டில் 17 விக்கெட்டுகளும், 123 ஒருநாள் போட்டிகள் மூலம் 156 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். தவிர பல்வேறு லீக் மூலம் 125 டி-20 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் . தற்போது வர்ணனையாளராக வலம் வருகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.