Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 6, 2016

"அத்தையைப் பாக்க விடமாட்றாங்க'- ஜெ., அண்ணன் மகள் தீபா கண்ணீர்


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்கிறார்? என்பதை எதிர்பார்த்து தமிழகமே காத்திருந்தாலும், குழப்பங்கள் மட்டுமே அதற்குப் பதிலாக கிடைத்து வருகிறது. இத்தனை நாட்கள் கடந்த பின்னரும் மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதாவை அவரது ரத்த சொந்தங்கள் யாரும் சந்திக்கவில்லை.  சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே ஜெயலலிதா உள்ளார் என தகவல்கள் வெளியாகும் நிலையில்,' "அத்தையை சந்திக்க என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர். மருத்துவமனை வாசலில் காத்திருந்து திரும்பிவிட்டேன்'" என  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் மகளான தீபா,'' அத்தைக்கு உடல் நலம் சரியில்லை என்பதை கேள்விப்பட்டு, அவரைப் பார்ப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அத்தை என் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருக்கிறார். ஆனால், அவரைப் பார்த்து ஆறுதல் சொல்ல, என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். மூன்று நாட்கள் தொடர்ந்து சென்றும், கேட்டிலேயே என்னை தடுத்து நிறுத்திவிட்டனர். அத்தையை பார்க்காமல் நான் திரும்பிச் செல்ல மாட்டேன் என நான் கறாராக கூறியதும், 'உயர் அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொண்டு உள்ளே அழைத்துச்  செல்வார்கள்' என அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், இதுவரை என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை'' என புலம்பியுள்ளார்.

சென்னையில் வசித்துவரும் தீபா ஆங்கில இலக்கியம் மற்றும் இதழியல் படித்துள்ளார். இவரது சகோதரர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றினை நடத்திவருகிறார். '' 1995-ல் என் அப்பா இறந்த போது எங்கள் வீட்டுக்கு அத்தை வந்தார். அதன் பிறகு அவரை சந்திக்க முடியவில்லை. 2012-ல் எனது அம்மா நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது கூட, எங்களால் அத்தையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அத்தை இரண்டு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வருகின்றன.  அத்தையை பார்க்க எங்களை அனுமதிக்க மறுக்கின்றனர். அத்தை உடல்நிலை விவகாரத்தில் ஏன் இவ்வளவு ரகசியம் காக்கப்பட வேண்டும்? இதன்பின்னணியில் இருப்பவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும்.'' என்கிறார்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.