Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 21, 2016

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் சென்டரில் இருந்த 8 பேர் பலியான சோகம்


விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த ஸ்கேன் சென்டருக்கு வந்த 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் மின் லாரியில் பட்டாசு ஏற்றப்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 20 பேர் பட்டாசு கிடங்கில் சிக்கினர். பட்டாசு கிடங்கின் அருகில் உள்ள ஸ்கேன் சென்டரில் நோயாளிகளும் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இறந்தவர்களின் பெயர் தெரியவந்துள்ளது. அவர்களில் வளர்மதி, பாஸ்கர், ராஜா, சொர்ணகுமாரி, தேவி, பத்மாவதி, சுப்புலட்சுமி என தெரியவந்துள்ளது. உயிரிழந்த 8 பேரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள் ஆவர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, பட்டாசு கடை உரிமையாளர் செண்பகராமன், கடைக்கு உரிமம் பெற்றிருந்த ஆனந்தராஜ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.