பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு, உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் குர்மன் சிங்கின் பெற்றோர், போதுமான மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் என் மகன் இறந்திருக்கமாட்டான் என குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, ஜம்மு காஷ்மீரின், கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தானிய படைகளால் கடுமையாக காயப்படுத்தப்பட்ட எல்லை பாதுகாப்பு வீரர் குர்மன் சிங்கிற்கு, ஜம்முவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜிந்தர் தாபர் கூறுகையில், “குர்மன் சிங் தலையில் புல்லட் தாக்கியிருந்தது. அவரை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்தோம். அவரின் பெற்றோர் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றி உயர்சிகிச்சையளிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்குள் துரதிருஷ்டவசமாக குர்மன் சிங் உயிரிழந்துவிட்டார்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் குர்மன் பெற்றோர் தரப்பில், “ குர்மனை போதுமான வசதிகள் இல்லாத ஒரே மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்தனர். இந்திய அரசு நினைத்திருந்தால் வெளிநாட்டிற்கு அனுப்பிக் கூட சிகிச்சையளித்திருக்கலாம். எங்கள் தரப்பில் மோடி அரசுக்கு வைக்கும் ஒரே கோரிக்கை இது தான். என் மகனைப் போல் யாரும் இறந்துவிடக் கூடாது. தற்போது எல்லைப் பகுதியில் ஒரே மருத்துவமனை தான் உள்ளது. எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு போதுமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துங்கள்”, இவ்வாறு பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், ராணுவத்தினருக்கு போதுமான மருத்துவ வசதிகள் கூட செய்துத்தரப்படவில்லை என்னும் இந்த பெற்றோரின் குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.