ராமானுஜர் சுவாமிகள் காலத்தில் நதி பிரச்னைகள் இல்லை. இப்போது மழைநீர் பாதுகாக்க தவறியதால், 1000 வருடங்கள் கழித்து கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் நதிநீர் பிரச்னை வருகிறது என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
ராமானுஜரின், ஆயிரமாவது அவதார ஜெயந்தி விழா, திருச்சி ஸ்ரீரங்கம் கோரத மூளையில் நடந்து வருகின்றது. வரும் 16-ம் தேதிவரை நடக்கும் இந்த விழாவின் முதல்நாளான இன்று, பெரிய ஜீயர் ரெங்க நாராயண ஜீயர், திருப்பதியின் சின்ன ஜீயர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக ஆளுநர் விஜயசாகர் ராவ் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய ஆளுநர் விஜயசாகர் ராவ், "ராமானுஜர் சுவாமிகள், ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட மகான், நாடுமுழுவதும் பயணம் செய்த அவர், கர்நாடகாவுக்கு சென்று அங்குள்ள மக்கள் கஸ்டப்படுவதை உணர்ந்து, அவர்களுக்கு உதவி செய்தார். அந்தப் பகுதி முன்னேற்றத்துக்காக அணைகட்டிக் கொடுத்தார். அப்போது நதி பிரச்னைகள் இல்லை. இப்போது மழைநீர் பாதுகாக்க தவறியதால், இப்போது 1000 வருடங்கள் கழித்து கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் நதிநீர் பிரச்னை வருகிறது. இதுமட்டுமல்லாமல் கோதாவரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பல நதிகளில் நீர் சிக்கல் இருக்கிறது.
உலகத்தில் உள்ள புத்தம், ஜைனம், சமணம், உள்ளிட்ட பல மதங்கள் இந்தியாவில் தோன்றியவை. அவை வளர்ந்து உலகம் முழுவதும் பரவியுள்ளன. இந்த எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. எந்த மதமும் தீவிரவாதத்தை போதிப்பதில்லை. ஆனால் சிலர் வன்முறையை கையிலெடுத்து தீவிரவாதத்தை பரப்புகிறார்கள். அதனால் எங்கோ ஒரு மூளையில் இருக்கும் சாதாரணமானவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. இந்திய பிரதமர் மோடி, முயற்சியால் யோகா தினம் அறிவிக்கப்பட்டது. இதை இப்போது உலகமே கடைபிடிக்கிறது. அதைப்போல் இந்த தேசம் பாரம்பரியமிக்க, கலாசாரம், பண்பாட்டைக் கொண்டது. இதை யாராலும் அழிக்க முடியாது" என்றார்.
விழாவில் ராமாநுஜர் வரலாறு அடங்கிய வாகனம் ஊர்வலமாக வந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.