Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

அப்போலோ வாசலில் பூஜை நடத்திய கோகுலஇந்திரா


முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மகளிர் அணி நிர்வாகிகளுடன் சேர்ந்து அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் பூஜை நடத்தினார்.

உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 26-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் நலம் பெற வேண்டி அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு பூஜைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் இன்று பூஜை நடத்தினார். புரோகிதர் மந்திரங்கள் ஓத, கோகுலஇந்திரா பூக்களைப் போட்டு பூஜை செய்தார். இந்த பூஜையில் விஜிலா சத்தியானந்த் எம்.பி., மகளிரணி இணை செயலாளயர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.