நெருப்புடா...நெருங்குடா பார்ப்போம்....இந்த பாட்டு ஹிட் ஆன அளவுக்கு ஹிட் ஆனது சமீபத்தில் வெளியான சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன். சுமார் 2.5 மில்லியன் எஸ் 7 போன்களைத் தயாரித்த சாம்சங் நிறுவனம் அதில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மொபைல்போன்களை விற்பனை செய்தது. ஆனால் இந்த சாம்சங் நோட் 7 மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் இந்த வார வைரல்..
சாம்சங் கேலக்ஸி நோட் 7 சார்ஜில் இருக்கும் வேளையில் தீடீரென தீப்பற்றி எரிகிறது என்பது தான் குற்றச்சாட்டு...மீம்ஸ்கள் வரை சென்று ஆன்லைனில் பரவியது சாம்சங் பிரச்னை.
சாம்சங் நோட் 7 தீப்பற்றுவது ஏன்?
பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் லித்தியத்தால் ஆனவை. அவற்றுள் இரண்டு எலக்ட்ரோடுகள் எதிரெதிர் திசையில் வைக்கப்பட்டிருக்கும். சார்ஜ் செய்யும்போது லித்தியம் அணுக்கள் நகரும். ஆனால் ஒருபோதும் இந்த இரண்டு எலக்ட்ரோடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுவிடக்கூடாது. அப்படி நடந்துவிடாமல் தடுக்க அதில் செப்பரேட்டர் வைக்கப்படும். நோட் 7-ல் இந்த செப்பரேட்டருக்கான இடைவெளி மிகவும் சிறியதாக அமைந்ததே அது வெடிப்பதற்கான காரணம்.
சாம்சங் கூறும் காரணம் என்ன?
வாடிக்கையாளர்கள் மொபைலை நீண்ட நேரம் சார்ஜ் செய்வதும், பரிந்துரைக்கப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தாததுமே நோட் 7 வெடித்துச் சிதறக் காரணம் என்கிறது சாம்சங் நிறுவனம்.

சாம்சங்குக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்ன?
உலகமெங்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 7 வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதற்கான தொகை திருப்பித் தரப்படும் அல்லது அந்த மொபைலைக் கொடுத்து வேறு சாம்சங் மொபைலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டிருந்தது சாம்சங் நிறுவனம். இதனால் இந்த நிறுவனத்துக்கு 18 பில்லியர் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், இதுபோன்ற நஷ்டத்தை ஒரு உலகளாவிய மொபைல் நிறுவனம் ஈடுகட்டுவது மிகமிகக் கடினம் என்றும் வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்னையால் ஆப்பிளுக்கு லாபமா?
சாம்சங், ஆப்பிள் என இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேதான் மொபைல் வர்த்தகத்தில் பலத்த போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இந்த இழப்பு, ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரிதும் சாதகமாக அமைந்துள்ளது.
பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்டையும் தன் வாடிக்கையாளர்களையும் எப்போதும் தன் கைவசம் வைத்திருக்கும். இப்போது, உலகின் பெருவாரியான வாடிக்கையாளர்களை கைப்பற்றுவதற்கும் விற்பனை விகிதத்தில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கும் ஆப்பிள், சாம்சங்குக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னையை தனக்கான வாய்ப்பாகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளது. ஆப்பிள் சமீபகாலமாக விலைகளை சற்று தளர்த்தி அனைவருக்கும் உள்ள ஆப்பிள் மோகத்தை சரியாக பயன்படுத்தி வருகிறது.

சாம்சங் மொபைல்கள் வாங்கிய சிறிது நாட்களில் சரிவர செயல்படாமல் ஹேங் ஆகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உண்டு. அவை ஆப்பிள் போன்களை காப்பி அடிக்கின்றன என்ற வழக்கும் பிரபலம். இந்நிலையில் இதுபோன்ற சூழலை சாம்சங் எப்படி சமாளிக்கும்? பெரிய இழப்பை ஈடுகட்ட சாம்சங்கால் முடியுமா? விட்ட இடத்தை மீண்டும் சாம்சங் பிடிக்குமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் சாம்சங் உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.