ரிலையன்ஸின் ஜியோ வழங்கும் இலவச அழைப்பு சேவையால் இணைப்பு துண்டிப்பு பிரச்னை அதிகரித்துள்ளதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளன.
கால் டிராப்புகள் எனப்படும் அழைப்பு பாதியிலேயே துண்டிக்கப்படுவது அதிகரித்திருப்பதாக எழுந்த புகார் குறித்து விளக்கமளிக்குமாறு வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. டிராயின் இந்தநோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள வோடபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள், ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இலவச அழைப்பு சேவையால் நெட்வொர்க்கில் அளவுக்கு அதிகமான நெரிசல் ஏற்பட்டு அழைப்பு துண்டிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளன.
ஜியோ வழங்கும் சேவையால் அதிகப்படியான நிமிடங்கள் மக்களால் பயன்படுத்தப்படுவதால், இணைப்புகள் கொடுக்கும் சேவை கோபுரங்களில் நெரிசல் ஏற்பட்டு அழைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படுவதாக அந்த நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை உறுதிப்படுத்த அந்த நிறுவனங்கள் மறுத்துவிட்டன.
கடந்த செப்டம்பர் 5-ல் சேவையைத் தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு, இலவச டேட்டா உள்ளிட்டவைகளை இந்தாண்டு இறுதிவரை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு அழைப்புக்கும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை ஜியோ மீறிவிட்டதாக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் புகார் தெரிவித்தன.
அதேநேரம், கடந்த செப்டம்பர் 23-ல் அழைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படுவது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்ட ஜியோ நிறுவனம், தனது நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு விடுக்கும் அழைப்புகளில் தினமும் 12 கோடி அழைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தது. ஒவ்வொரு ஆயிரம் அழைப்புகளிலும் 5-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படக் கூடாது என்பது டிராய் வகுத்துள்ள விதி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.