Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 27, 2016

4 வயதில், 7 மொழிகள் பேசி அசத்தும் ரஷ்யச் சிறுமி!


நான்கு வயதில்தான் குழந்தைகள் A,B,C,D கற்க ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் 7 மொழிகளில் பேசி உலகையே பிரமிக்கவைத்திருக்கிறார் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி பெல்லா தெவ்யாகிண்டா. சமீபத்தில் ரஷ்யா டி.வி சேனல் நடத்திய டேலென்ட் ஷோவில் பங்குகொண்ட பெல்லா, ரஷ்யா, ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மனி, சீனா மற்று அரபு மொழிகளில் பேசி அரங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படித்தியிருக்கிறார்.

7 விதமான மொழிகளைப் பேசக்கூடிய பிரதிநிதிகள் மேடையில் வரிசையாக நின்றுகொண்டு, பெல்லாவை அழைத்து தனித்தனியாக ஒவ்வொரு மொழியிலும் கேள்விகள் கேட்டனர். அந்தந்த மொழியை நன்றாகப் புறிந்துகொண்ட பெல்லா, டக் டக்கென்று பதில் அளித்து நடுவர்களை ஆச்சரியப்படுத்தி நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தார். ''ஒருவர் ஏதேனும் மற்ற மொழியை கற்று பேசவேண்டும் என்றால் வருடக்கணக்கில் பிடிக்கும். அப்போதும் தட்டுத் தடுமாரித்தான் பேசுவார்கள். ஆனால் பெல்லா, இந்த சிறுவயதிலேயே இத்தனை மொழிகள் பேசுகிறாரே, அவரால் மட்டும் எப்படி முடிந்தது'' என்று நடுவர்கள் பெல்லா அம்மாவிடம் கேட்டனர். அதற்கு ''முதலில் பெல்லாவுக்கு நானும் அவங்க அப்பாவும் ஆங்கிலம் கற்றுத்தர ஆரம்பித்தோம். அப்போது பெல்லாவுக்கு வயது இரண்டு.


நாங்கள் சொல்லிக் கொடுப்பதை டக் டக்னு பிடித்துக்கொண்டார். அவளிடம் இருக்கும் ஆர்வத்தைக் கண்டு பிரமித்தோம், பிறகு மெதுவாக மற்ற மொழிகளை கற்றுத்தரவேண்டும் என்று தீர்மானித்தோம். அப்பவே ரஷ்ய மொழியோடு ஆங்கிலமும் பேச ஆரம்பித்துவிட்டார். பிறகு மற்ற மொழிகளுக்கு டியூஷன் வைத்து கற்றுத்தர ஆரம்பித்து நான்கு வயதிலேயே ஏழு மொழிகளை கற்று ஆச்சர்யப்படவைத்தார் பெல்லா.

தற்போது ரஷ்யா தவிர மற்ற மொழிகளை கற்க ஆறு மணி நேரம் செலவிடுகிறார். காலையில் 10 மணி ஆரம்பித்து 1 மணிவரையிலும், மறுபடியும் 5 மணி முதல் 8 மணிவரையிலும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வருகிறார். பிள்ளைகள் இவ்வளவு வகுப்புகள் கற்கவேண்டும் என்றால் முடியாத காரியம். ஆனால் பெல்லாவின் மெமரி பவர் கண்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் அசந்துபோகிறார்கள். அதுமட்டும் அல்ல சாதாரண மாணவர்களைப் போல் பள்ளி பாடங்களைப் படித்தும் மற்ற மாணவர்களோடு ஓடி ஆடி விளையாடி வருகிறார்.


ஏழு மொழிகளை பேசிய சிறுமியின் வியக்கவைக்கும் சாதனையைக் கண்டு நடுவர்களையும், பார்வையாளர்களையும் பிரமிக்கச் செய்த பெல்லா, அடுத்த லெவலுக்கு செலக்ட் ஆகியிருகிறார். இதில் வெற்றி பெற்றால் பெல்லாவுக்கு 20,000 டாலர்கள் பரிசாக கிடைக்கும். தற்போது யூட்யூபில் பெல்லாவின் அசத்தல் வீடியோதான் வைரல். அக்டோபர் 18-ம் தேதி வெளியான இந்த வீடியோ இதுவரை ஒன்றரை லட்சம் பேர் பார்த்து அசந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.