Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 14, 2016

அப்போலோவில் ராஜாத்தி அம்மாள்...!


கிரீம்ஸ் ரோடு அப்போலோ கடந்த மாதம் வரை புகழ்பெற்ற மருத்துவமனையாக மட்டுமே இருந்தது. ஆனால், இன்று தமிழக அரசியல் சூழலைத் தீர்மானிப்பது போயஸ் கார்டனோ, கோபாலபுரமோ இல்லை; அப்போலோதான். எல்லாம் ஒரே நாள் இரவில் தலைகீழாக மாறிவிட்டது.


செப்டம்பர் 22-ம் தேதி, முதல்வர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது, இந்த மாதிரியான சூழல் ஏற்படும் என்பது யாருக்குமே தெரியாத ஒரு விஷயம். தொடர்ந்து அறிக்கைகள் வெளிவந்த நிலையில் திருமாவளவன் சென்று ஆரம்பித்து வைத்தார். அவரைத் தொடர்ந்து சிறிதும், பெரிதுமாக அரசியல் தலைவர்கள் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அக்டோபர் மாதம் முதல் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்து பார்த்து போனபின்தான் அப்போலோ அரசியல் களமாக மாற ஆரம்பித்தது.


அன்று தொடங்கி இன்று வரை அகில இந்திய தலைவர்கள், பக்கத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என வரிசையாக முதல்வரை நலம் விசாரிக்க வந்து சென்றுகொண்டு இருக்கிறார்கள். உச்சகட்டமான எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினும் நேரில் வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார்.

13-ம் தேதியான நேற்றும் தலைவர்களின் வருகை தொடர்ந்தது. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அப்போலோ வந்தார். இப்படி தினம் தினம் தலைவர்கள் வருகையால் அப்போலோதான் தற்போதைய தமிழகத்தின் ஹாட்-டாபிக்.
இந்நிலையில் நேற்று முதல்வர் உடல்நிலை பற்றி அறிய அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதியின் துணைவியாரான ராஜாத்தி அம்மாள். நேற்று இரவு 9.30 மணியளவில் சி.ஐ.டி காலனியில் இருந்து அப்போலோ வந்தவர், அங்கு சசிகலாவைச் சந்தித்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் 45 நிமிடங்கள் விவாதித்து இருக்கிறார்கள்.

இந்த திடீர் சந்திப்பு அப்போலோ வட்டாரத்திலும், அரசியல் சூழலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.