Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

கருணாநிதிக்கு திடீர் உடல்நலக் குறைவு


திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின்படி கருணாநிதி ஓய்வெடுத்து வருவதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தலைவர் கலைஞருக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் கலைஞரை காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.