தீபாவளி நெருங்கி வரும் நிலையில், தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்கும் வணிகர்கள் வணிகவரித் துறையில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒவ்வொரு வருடமும் வணிகர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் பட்டாசு கொள்முதல் செய்து தற்காலிக கடைகள் அமைத்து சில்லரை விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு தற்காலிகமாக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்கும் வணிகர்கள் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் 2006 விதி 38(3)(அ)-ன்கீழ் வணிகவரித்துறையில் பதிவு எண் பெற்ற பிறகே கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களது பதிவுச்சான்றினை கடைகளில் பார்வைக்கு வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து பட்டாசு வணிகர்களும் தங்களது கொள்முதலுக்கான பட்டியல்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பட்டாசுகளுக்கு பட்டியல்கள் வழங்கப்பட வேண்டும். கொள்முதல் மற்றும் விற்பனை குறித்த விபரங்களை தங்களது விற்பனை இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட வரிவிதிப்பு வட்டத்தில் தாக்கல் செய்து அதற்குண்டான வரியைச் செலுத்த வேண்டும். வணிகர்களின் நலன் கருதி தற்காலிகமாக பதிவுச்சான்று பெற ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி தற்காலிக பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் உதவிமையங்களை அணுகி நேரடியாக விண்ணப்பம் செய்து பதிவுச் சான்று பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.